கட்டிடங்களின் கதை 10: உலகின் மிகப் பெரிய நாடாளுமன்றம்

By ரேணுகா

உலகிலேயே மிகப் பெரிய நாடாளுமன்றத்தைக் கொண்டுள்ளது வங்கதேசம். இருநூறு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த நாடாளுமன்றத்தின் பெயர் ஜாட்டியா சங்சத் பவன் (Jatiya Sangsad Bhaban). இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தை வடிவமைத்தவர் 20-ம் நூற்றாண்டின் தலைச்சிறந்தக் கட்டிடக்கலை  வடிவமைப்பளரான லூயி கான்.

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ளது ஜாட்டியா சங்சத் பவன். இந்தியாவின் உதவியுடன் 1959-ம் ஆண்டு பாகிஸ்தான் கட்டுப்பாட்டியில் ஓர் அங்கமாக இருந்தது கிழக்கு பாகிஸ்தான். அப்போது தங்களுடைய நாடாளுமன்றத்தின் ஒரு பகுதியாக டாக்காவில் துணை நாடாளுமன்றம் கட்ட பாகிஸ்தான் அரசு திட்டமிட்டிருந்தது. அதற்காக வடிவமைப்பாளர் லூயி கான் 1962-ம் ஆண்டு டாக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

ஆனால் அதற்குள் 1971-ம் ஆண்டு பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து சுதந்திர நாடாக வங்கதேசம் உருவெடுத்தது. சுதந்திர வங்கதேசத்தில் கட்டப்படும் நாடாளுமன்றம் ஒருவரலாற்று நினைவுச்சின்னமாக இருக்கவேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தார் கான். இக்கட்டிடத்துக்கான பணிகள் 1961-ம் ஆண்டுத் தொடங்கி 1982- ம் ஆண்டு நிறைவடைந்தது. மூன்றரைக் கோடி ரூபாய் மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள ஜாட்டியா சங்சத் பவன், வங்க மக்களின் காலச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும்.

உலகின் மிகப்பெரிய நாடாளுமன்ற என்ற அந்தஸ்து ஜாட்டியா சங்சத் பவன் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் மிகச் சிறந்தக் கட்டிடங்களுக்கு வழங்கப்படும்  ‘அகர்கான் விருது’ பெற்ற கட்டிடமாக விளங்குகிறது. வங்கதேசத்தின் காலச்சாரம், பாரம்பரியத்தை ஜாட்டியா சங்சத் பவனின் வெளிப்புறத் தோற்றம் வெளிப்படுத்துகிறது.

ஆனால் அதேநேரம் நவீனக் கட்டிட வடிவமைப்பு முறையை  இந்த கட்டிடத்தின் உட் பகுதியில் காண முடியும். இக்கட்டிடத்தினுள் வங்கதேசத்தின் நாடாளுமன்ற கூட்ட அரங்கம், பிரதமர் அலுவலகம், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அறை, உறுப்பினர்களின் தங்கும் விடுதி, உணவகம் ஆகியவை உள்ளன.எண்ணற்ற நதிகள் பாயும் இடமாக உள்ளது வங்கதேசம். அதை வெளிப்படுத்தும் விதமாக ஜாட்டியா சங்சத் பவனின் வெளிப்புறப் பகுதியில் செயற்கையான நீர்ப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஜாட்டியா சங்சத் பவன் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மெயின் பிளாசா, தெற்கு பிளாசா, பிரசிடென்சியில் பிளாசா எனத் தனிதனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பாளர் லூயி கானின் கட்டிடங்களில் பொதுவாகக் காணப்படும் அம்சம், அவர் இயற்கையான வெளிச்சத்தைக் கட்டிடத்தினுள் பரவும் வகையில் வடிவமைத்திருப்பார்.

ஜாட்டியா சங்சாத் பபனில் தனித்தனியாக மொத்தம் 9 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 8 தொகுதிகளின் உயரம் மட்டும் 110. அதேபோல் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள எண்கோண வடிவத் தொகுதியின் உயரம் 155 அடியாகும். கட்டிடத்தின் உட்புற பகுதிகள் ஒவ்வொன்றும்  பல்வேறு விதமாக இணைக்கப்பட்டுள்ளன.

ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்

கட்டிட உலகின் ஜாம்பவான்களின் ஒருவரான லூயி கான், ஜாட்டியா சங்சத் பவன் கட்டிடத்தின் முக்கால்வாசி பணிகள் பூர்த்தியான நேரத்தில் 1974-ம் ஆண்டு காலமானார். கட்டிடத்தின் ஏனைய பகுதிகளை கானின் உதவியாளர் டேவிட் விஸ்டம் நிறைவுசெய்தார்.  ஒன்றுப்பட்ட சோவியத் ரஷ்யாவில் 1901- ம் ஆண்டு ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் லூயி கான்.

அவருக்கு மூன்று வயதாக இருந்தபோது எதிர்பாராதவிதமாக நடந்த தீ விபத்தால் கானின் முகம் பாதிக்கப்பட்டது. அந்த வடுக்கள் அவரின் இறுதிக் காலம்வரை இருந்தது. தன்னுடைய சிறுவயதிலேயே சிறப்பாக ஓவியம் வரைவதில் திறமைசாலியாக இருந்தார் கான்.

அதன் பிறகு குடும்பத் தேவைக்காக மவுனப் படங்களுக்கு பின்னணியில் பியானோ இசை வாசித்து வருமானம் பெற்றுவந்தார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை கட்டிடவியல் படித்தார் கான். அதன்பிறகு (Beaux arts tradition) கல்லூரியில் ஓவியங்கள் வரைகலை குறித்தும் படித்துள்ளார். 1928-ம் ஆண்டு ஐரோப்ப நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட லூயி கான் அங்கிருந்த கட்டிட வடிவமைப்பு முறையால் ஈர்க்கப்பட்டார்.

kattidam-3jpg

ஆனால் அவரின் தனித்த கட்டிட வடிவமைப்பியல் முறை அவருடைய 50 வயதுக்கு பிறகுதான் வெளிப்பட்டது. ஆசியபாணி கட்டிடங்கள், இத்தாலி, கிரீஸ், எகிப்து ஆகிய நாடுகளின் கட்டிட வடிவமைப்பு முறையில் ஈர்க்கப்பட்ட கான், பின்னர் தனக்கெனத் தனித்துவமான கட்டிட வடிவமைப்பு முறையை வெளிப்படுத்தத் தொடங்கினார். சிறந்த கட்டிட வடிவமைப்பாளருக்கு வழங்கப்படும் ‘American institute of architects (ஏஐஏ) விருதை இரண்டு முறை பெற்றுள்ளார் கான்.

அதேபோல் இங்கிலாந்தின் ராயல் அகாடமியின் தங்கப்பதக்கம் விருதையும் பெற்றுள்ளார். அவரின் மறைவுக்கு பிறகு லூயில் கான் குறித்து (My Architect) என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டது. அதேபோல் ராபர்ட் மெக்கார்டர் என்பவர் ‘Louis I Khan’ என்ற பெயரில் கானின் கட்டிட வடிவமைப்பில் முறை, வாழ்க்கை முறை குறித்து புத்தகம் எழுதியுள்ளார். இப்புத்தகத்தில் வங்கதேசத்தின் ஜாட்டியா சங்சத் பவன் 21-ம் நூற்றாண்டி முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்