கொசுத் தொல்லை தாங்க முடியவில்லையா?

By தியானன்

 

வே

று எந்தத் தொல்லையென்றாலும் பரவாயில்லை. கொசுத் தொல்லையைத்தான் பலராலும் தாங்கிக்கொள்ள முடியாது. முதலில் இது ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லை என உறங்க முயன்றாலும் கொசுக்கள் படையெடுத்து வந்து கடிக்கத் தொடங்கிவிட்டால் எவ்வளவு பெரிய சகிப்புத்தன்மைவாதியும் வன்முறையாளராக மாறிவிடுவார். கொசுத் தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்குச் சட்டென அதன் தீவிரம் புரிந்துவிடும்.

கொசுக்களை விரட்டத்தான் எவ்வளவு வழி முறைகளை நாம் கண்டுபிடித்திருக்கிறோம். கொசுவத்திச் சுருள் கண்டுபிடித்தோம். அதையும் தாண்டிக் கொசுக்கள் உயிர் வாழப் பழகிவிட்டன. அதன்பிறகு திரவத்தை மின்சாரத்தால் ஆவியாக்கி கொசுக்களை விரட்டினோம். அதிலும் கூடுதல் ஆற்றலுள்ளதும் சந்தையில் விற்பனைக்கு வந்தது. கொசுக்களுக்காக நம் உடலில் கிரீம் பூசிக்கொண்டோம்.

open type Open type mosquito net திறக்கும் வகை

இதுபோதாதென்று கொசுக்களைக் கொல்லும் பேட் வேறு விற்பனைக்கு வந்தது. இத்தனை இருந்த பிறகும் கொசுக்களை நம்மால் விரட்ட முடியவில்லை. ஆனால், கொசு விரட்டுவதற்காகத் தொடக்கத்தில் பயன்பட்ட கொசு வலையே இப்போது கொசுக்களை விரட்ட ஒரு நல்ல தீர்வாகப் பார்க்கப்படுகிறது.

கொசுவலையில் பலவகை உள்ளன. நமது படுக்கையைச் சுற்றில் அமைத்துக்கொள்ளும் கொசு வலை. இதனால் படுக்கையில் மட்டும் கொசுவராமல் இருக்கும். வீட்டின் மற்ற பகுதியில் கொசுக்கள் வரும். இதனால் கொசுக்கள் வீட்டுக்குள் பெரும்பாலும் ஜன்னல் வழிதான் நுழையும். இந்தப் பகுதியைக் கொசுவலையால் மூடிவிட்டால் கொசுத் தொல்லைக்கு ஒரு தீர்வாக இருக்கும். இந்தக் கொசுவலையில் பல வகை இருக்கின்றன.

நைலானில்தான் அதிக அளவில் ஜன்னலுக்கான கொசுவலை உருவாக்கப்பட்டது. அடிக்கடி கழற்றி மாட்டும் வசதி கொண்டது. இது எளிதில் சேதமடையக் கூடிய வாய்ப்புள்ளது. குறைந்த கால உழைப்பு மட்டுமே கொண்டது. மேலும் காற்று அதிக அளவில் கிடைக்காது என்பது குறையாகத் தோன்றும். இதற்கு மாற்றாக அலுமினியக் கொசுவலை இப்போது சந்தையில் கிடைக்கிறது. இது ஜன்னல் கதவுக்கு இணையாக நிறுவப்படுகிறது. இந்த அலுமினிய வலை, எளிதில் சேதமடையாது. நீடித்து உழைக்கும். மேலும் ஜன்னல் கதவை மட்டும் திறந்துவைத்தால் போதுமானது. அதற்குள் இருக்கும் அலுமினிய வலை கொசுவிலிருந்து வீட்டைப் பாதுகாக்கும். அலுமினியம் எடை குறைவாக இருப்பதால் கையாள்வதும் எளிது.

கண்ணாடி ஜன்னல், மர ஜன்னல், இரும்பு ஜன்னல் என எல்லா வகை ஜன்னல்களிலும் இந்த அலுமினிய வலையைப் பொறுத்த முடியும். இதிலும் பக்கவாட்டில் அசைவதுபோலவும் அமைக்க மூடியும். அதுபோல் திறந்து மூடும் வகையிலும் அமைக்கலாம். மேலிருந்து கீழ் இயக்குவதுபோலவும் அமைக்க முடியும். மடிப்பு முறையிலும் அலுமினியம் வலையை அமைக்க முடியும்.

இவற்றில் திறந்து மூடும் வகையைக் காட்டிலும் பக்கவாட்டில் மூடும் கொசுவலைதான் இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை எளிதில் அசைத்துப் பயன்படுத்த முடியும். ஆனால், கொசுவலை நகரும் தண்டவாளத்தைச் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். இந்த அலுமினிய வலையையும் வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். அலுமினியம் வலை அமைக்கச் சதுர அடிக்க ரூ.150-லிருந்து செலவாகும். இது பல்வேறு நிறங்களிலும் கிடைக்கிறது. தேன் நிற வலைதான் பெரும்பாலும் விரும்பப்படுகிறது. என்றாலும் வெள்ளை, பழுப்பு, வெளிர் சாம்பல் ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

15 hours ago

மேலும்