சாகச வீரனாகும் பெங்குயின்

By ஜெய்

பெங்குயின் பார்த்திருக்கீங்களா? வாத்து மாதிரி மூஞ்சியை வச்சிருக்கும். ஆனால் ரெண்டு கால்ல தத்தி தத்தி வரும். இதுக்கு றெக்கை இருந்தாலும் இதால பறக்க முடியாது. அதிகமான குளிர்ப் பகுதியில்ல இதுங்க வாழும். இதுங்க நம்மளா மாதிரி நிலத்திலயும் நடக்கும். மீன் மாதிரி கடல்லயும் நீந்தி ஆழ்கடல்ல இருக்குற சின்னச் சின்னப் பூச்சிகளையும், மீன்களையும் பிடிச்சு சாப்பிடும். அந்த மாதிரியான பெங்குயினோட கதைதான் இது.

‘Surf's Up’ என்கிற இந்தப் படத்துல கோடி மாவரிக் அப்படினு ஒரு பெங்குயின்தான் ஹீரோ. அந்தப் பெங்குயின் ஒரு நீர்ச் சறுக்கு விளையாட்டு வீரன். அவனுக்குச் சின்ன வயசில இருந்தே சறுக்கு விளையாட்டுன்னா உயிர். அவனுக்கு ஒரு குண்டு அண்ணனும் அம்மாவும் இருக்காங்க. அவுங்க ரெண்டு பேரும் அவனோட விளையாட்டு ஆர்வத்துக்கு ஆதரவா இருந்தாங்க. சரி இந்த கோடியோட நீர்ச் சறுக்கு விளையாட்டு ஆர்வத்துக்கு யார் காரணம்?

அவுங்க ஊர்ல இருந்த ஒரு பெரிய நீர்ச் சறுக்கு விளையாட்டு வீரன்தான் காரணம். அந்தப் பெரிய பெங்குயின் பெயர் பிக்சி. கிரிக்கெட்ல சச்சின் டெண்டுல்கர், தோனி மாதிரி சறுக்கு விளையாட்டுல இந்த பிக்சி. இதுக்கு கிடைக்கிற மரியாதையும் புகழையும் பார்த்து தானும் பிக்சி மாதிரி பெரிய நீர்ச் சறுக்கு விளையாட்டுக்காரனா ஆகணும்னு கோடிக்கு ஆசை. கோடி கஷ்டப்பட்டு பயிற்சி எடுக்குது.

திடீர்ன்னு ஒருநாள் பிக்சி எங்கயோ போயிடுது. பிக்சி எங்க போனது? என்ன ஆனது? உயிரோட இருக்கா? யாருக்கும் ஒண்ணும் தெரியாம போயிடுது. அந்த ஊர்ல உள்ள எல்லாப் பெங்குயின்களும் பிக்சிய மறந்து அதுங்க அதுங்க வேலையில பிஸியாகிடுதுங்க. ஆனா, நம்ம ஹீரோ கோடி மட்டும் பிக்சியை நினைச்சி பயிற்சி பண்ணிக்கிட்டே இருக்கு. காலம் ஓடி இப்ப கோடி பெரிய பையனா வளர்ந்திடுறார்.

இந்தச் சமயத்துல ஒரு பனிக் கரடியும், கடல் பறவையும் சேர்ந்து பிக்சி நினைவா ஒரு சறுக்கு விளையாட்டுப் போட்டி நடத்த முடிவு பண்ணுதுங்க. அந்தப் போட்டியில கலந்துக்க கோடிக்கும் இன்விடேசன் வருது. போட்டி நடக்குற பென் தீவுல பிச்சிக்கு ஒரு சேவல் ஃப்ரண்ட்ஷிப் கிடைக்குது. அதுவும் போட்டிக்குத்தான் வந்திருக்கு.

அங்க இன்னொரு ஆளையும் கோடி மீட் பண்ணுது அது பேரு டாங்க். அது ஒரு பெரிய பெங்குயின். பல சறுக்கு போட்டியில்ல ஜெயிச்சி கப் வாங்கி குவிச்சிருக்கு அது. கோடி உருவத்தைவிட ரெண்டு மூணு மடங்கு பெரிய ஆள் இந்த டாங்க். வந்த இடத்துல டாங்க்குக்கும், பிக்சிக்கும் சண்டை வந்துடுது.

ரெண்டு பேரும் சண்டை போடுறப்ப போட்டி நடத்துற பனிக் கரடியும் கடல் பறவையும் தடுத்து ரெண்டு பேரும் விளையாட்டுல சண்டைபோட்டுக்கோங்ன்னு சொல்லுதுங்க.

அதனால மெயின் போட்டிக்கு முன்னாடி டாங்க்கும், கோடிக்கும் தனியா ஒரு போட்டி நடக்குது. அதுல டாங்க்குக்கு சமமா கோடி பெரிய பெரிய கடல் அலை மேல சறுக்கி சறுக்கி வந்துச்சு. டாங்க்கு ஆச்சரியம். கரையில இருந்து மற்ற பெங்குயின் எல்லாம் கைதட்டி விசில் அடிக்குதுங்க. ஆனால் திடீர்ன்னு ரொம்பப் பெரிய அலை வந்து கோடி

மேல மோதி அது பலகையை விட்டுக் கிழே விழுந்து கடலுக்கு அடியில இழுத்துக்கிட்டுப் போயிடுது. கஷ்டப்பட்டு எழுந்து மேல வந்து திரும்பவும் ஒரு பெரிய அலை உள்ள இழுத்துக்கிட்டுப் போயிடுது. இப்படித் திரும்பத் திரும்ப அலை அடிச்சு கோடி பெங்குயின் கடலுக்கு அடியில போய் மூழ்கிடுது.

அதோட ப்ரண்டான இன்னொரு லேடி பென்குயின் அதைக் காப்பாத்தி தரைக்கு இழுத்துட்டு வருது. ஆனால் கோடிக்கு முழிப்பே வரல. லேடி பென்குயின் அதோட அங்கிள் கீக் வீட்டுக்கு கோடியக் கொண்டு போய் ரீட்மெண்ட் கொடுக்குது. கீக் ஒரு டாக்டர். கொஞ்சங் கொஞ்சமா கோடிக்கு முழிப்பு வருது.

அப்புறம் கீக், கோடிக்குச் சறுக்கு விளையாட்டச் சொல்லிக்கொடுக்குது. அப்பதான் காணாமல் போன பிக்சி தான் இந்த கீக்ன்னு கோடிக்கு ஒரு சந்தேகம். ஆனால் கீக் கிட்ட அதைப் பத்திக் கேக்கல. இதுக்கு இடையில போட்டியிடும் வந்திடுது. கோடி போட்டியில கப் வாங்குச்சா? பிக்சிய கோடி கண்டுபிச்சதா? Surf's Up’ படம் பாருங்க. ​

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

17 mins ago

சுற்றுச்சூழல்

27 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

22 mins ago

விளையாட்டு

43 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்