கோல்... களைகட்டுது கால்பந்து

By ஆதிடி.கார்த்திக்

#நவீன கால்பந்து விளையாட்டு தோன்றிய ஆண்டு 1863தான் என்றாலும், கி.மு. 206-லேயே சீனாவில் இது போன்ற விளையாட்டு இருந்ததாகக் குறிப்பு உள்ளது. கால்பந்தைப் போன்ற அந்த விளையாட்டின் பெயர் சூ சூ (Tsu-Tsu). சீனப் பேரரசரின் பிறந்த நாளைக் கொண்டாட இதை விளையாடியிருக்கிறார்கள். போர் வீரர்களுக்குப் பயிற்சியளிக்கவும் இந்த விளையாட்டைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

#பண்டைய அலாஸ்கா, கனடாவிலும், 1600களில் வடஅமெரிக்காவில் செவ்விந்தியர்களாலும் கால்பந்தைப் போன்ற விளையாட்டுகள் விளையாடப்பட்டுள்ளன.

#இங்கிலாந்தில் 19-ம் நூற்றாண்டில்தான் கால்பந்து (Football) என்ற பெயர் உருவானது. பிறகு, உலகெங்கும் பல நாடுகளுக்குப் பரவ ஆரம்பித்தது.

#1904-ம் ஆண்டு சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (FIFA) உருவானது. அதே ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டித் தொடரை நடத்த வேண்டுமென்று பிரான்ஸைச் சேர்ந்த ஜூல்ஸ் ரிமெட், ஹென்றி டெலானே ஆகியோர் யோசித்தார்கள்.

#ஆனால், 1930-ல் தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள உருகுவே நாடு, தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாட, முதல் உலகக் கோப்பைப் போட்டியை நடத்தத் தீர்மானித்தது. அர்ஜெண்டினாவை வீழ்த்தி அந்தக் கோப்பையை உருகுவே வென்றது.

#ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் உலகில் நடைபெறும் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று. ஒலிம்பிக்குக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விளையாட்டுப் போட்டி இதுதான். உலகெங்கும் அதிக நாடுகளால் விளையாடப்படும் அணி விளையாட்டும் இதுதான்.

#ஒரு போட்டித் தொடரில் அதிக கோல் அடிக்கும் வீரர்களுக்கு ‘தங்கக் காலணி' பரிசு வழங்கும் முறை 1930-ம் ஆண்டு முதல் பின்பற்றப்படுகிறது.

#1938-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் காரணமாக உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி 12 ஆண்டுகள் நடக்கவில்லை.

#இந்தியாவுக்கும் கால் பந்துக்கும் ரொம்ப தூரம் என்று நினைக்கிறோம். உண்மையில், 1950-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாட இந்தியா தகுதி பெற்றது. ஆனால், இந்தியக் கால்பந்து வீரர்கள் ஷூ இல்லாமல் விளையாடச் சென்றனர். ஃபிஃபா விதிமுறைகள் அதை ஏற்றுக்கொள்ளாததால், இந்தியா பங்கேற்க முடியாமல் போய்விட்டது.

உதைப்பதில் சாதனைகள்

உலகக் கோப்பைப் போட்டிகள் எல்லாவற்றிலும் விளையாடிய ஒரே அணி பிரேசில். கோப்பையை அதிக முறை வென்ற அணியும் அதுதான் (1958, 1962, 1970, 1994, 2002). ஆனால், ஒருமுறைகூட சொந்த மண்ணில் கோப்பையை வென்றதில்லை. அங்குதான் தற்போதைய உலகக் கோப்பை போட்டி நடக்கிறது.

#உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் அதிக முறை விளையாடிய நாடுகள் பிரேசில், ஜெர்மனி. இரண்டும் தலா 7 முறை.

#அதிக உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களில் விளையாடிய வீரர்கள்: அன்டோனியோ கர்பயால் (மெக்சிகோ, 1950-1966), லோதர் மாட்டாஸ் (ஜெர்மனி, 1982-1998), கியான்லுகி பஃபான் (இத்தாலி, 1998-2014)

#கோப்பை வென்ற அணியில் அதிக முறை இடம்பெற்ற வீரர்: 3 முறை, பீலே (பிரேசில், 1958, 1962, 1970).

#உலகக் கோப்பைப் போட்டிகளில் (இறுதிச் சுற்று) மிக அதிக கோல் அடித்த வீரர் பிரேசிலின் ரொனால்டோ - 15 (1998-2006: 3 உலகக் கோப்பைகளில்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

3 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்