உயிரினம்: அழகிய இந்திய மயில்கள்

By ஷங்கர்

#மயில்களில் மூன்று வகை உண்டு. இந்திய மயில்கள், பச்சை மயில்கள் மற்றும் காங்கோ மயில்கள்.

#இந்திய மயில்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் காணப்படுகின்றன.

#பச்சை மயில்கள் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் காங்கோ மயில் மத்திய ஆஃப்பிரிக்காவிலும் காணப்படுகின்றன. காங்கோ மயில்கள் வான்கோழிகள் போல இருக்கும்.

#இந்தியாவின் தேசியப் பறவையாக மயில்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்துப் புராணங்களில் மயில் புனிதமான பறவையாக உள்ளது. அதன் தோகையில் காணப்படும் கண்கள் கடவுளின் கண்களாகக் கருதப்படுன்றன.

#மயில்களில் ஆண் மயில்கள் தோகைகளைக் கொண்டிருக்கும். பெண் மயிலுக்குத் தோகை கிடையாது. பச்சை, நீலம், கரிய நிறம் மின்னும். சராசரியாக 200 இறகுகளை ஆண் மயில் கொண்டிருக்கும். பெண் மயில் ஆண் மயிலை விட சிறியதாகவும் பழுப்பு நிறத்துடனும் இருக்கும்.

#இந்திய மயில்களின் தோகைகள் மட்டுமே பிரகாசிக்கும் நிறங்களைக் கொண்டிருப்பவை. பெண் மயில்களை ஈர்ப்பதற்காகத் தன் அழகிய தோகைகளை ஆண் மயில்கள் பயன்படுத்துகின்றன.

#ஆண் மயிலின் நீளமான தோகை, அதன் உடல் நீளத்தில் 60 சதவீதம். பெண் மயில்கள் தங்கள் ஆண் இணைகளைத் தோகையின் அளவு, வண்ணம் மற்றும் தோகையை விரிக்கும் அழகு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கும்.

#பூச்சிகள், தாவரங்கள் மற்றும் சிறு உயிர்களை உணவாக மயில்கள் உட்கொள்ளும்.

#ஆண் மயில் தன் தோகைகளை ஆண்டுதோறும் உதிர்த்து விடும். பல நாடுகளில் இந்த இறகுகளை அரிய பொருளாக சேகரிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் தோகைக்காக மயில்கள் கொல்லப்படுவதில்லை.

#இந்திய வகை மயில்களில் உயிரியல் ரீதியாக நிறக் குறைபாடு ஏற்பட்டு பிறப்பவையே வெள்ளை மயில்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

45 secs ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்