நம்ப முடிகிறதா?: அலுமினியப் பறவைகள்

By ஆதி

ஒவ்வொரு முறை கடந்து போகும்போதும் குழந்தைகளை ஆச்சரியப்படுத்தக்கூடிய விஷயம் ஒன்று உண்டென்றால், அது விமானம்தான். வானில் ஏறிப் பறக்க வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்குமே இருக்கிறது. பறக்க வேண்டும் என்ற தங்கள் ஆசையை, விமானத்தில் ஏறிப் பறப்பதன் மூலம் மனிதர்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். பறப்பது மட்டுமில்லை, மேலும் பல ஆச்சரியங்களைக் கொண்டது விமானம்:

1. உலகில் ஒவ்வொரு நொடிக்கும் ஒரு விமானம் வானில் ஏறிப் பறந்து கொண்டிருக்கிறது, தரையிறங்கிக் கொண்டிருக்கிறது.

2. விமானத்தின் டயர்கள் நம்மைச் சுற்றியுள்ள காற்றால் நிரப்பப்பட்டவை அல்ல. அவை நைட்ரஜன் வாயுவால் நிரப்பப்பட்டவை. எனவே, அதில் ஆக்சிஜன் இல்லை. இதன் காரணமாக விபத்து ஏற்பட்டால் டயர் தீப்பிடிக்காது. தீப்பிடித்து எரிய ஆக்சிஜன் அவசியம்.

3. லியனார்டோ டாவின்சிதான் விமானத்துக்கு முதல் டிசைனை வடிவமைத்தவர். வெறும் மனித சக்தி மூலம் விமானத்தைப் பறக்க வைக்க முடியாது, அதற்கு இயந்திர சக்தி தேவை என்று சொன்னவர் டாவின்சிதான்.

4. ஜம்போ ஜெட் எனப்படும் போயிங் 747 விமானங்கள் எவ்வளவு பெரியவை என்றால், 1903-ல் ரைட் சகோதரர்கள் இயக்கிய உலகின் முதல் பரிசோதனை விமானத்தின் அகலமான 21 அடியைவிட, 10 மடங்கு அகலமானது.

5. வில்பர் ரைட், ஆர்வில் ரைட் ஆகிய இருவரும் முதலில் பறக்கச் செய்த கிட்டி ஹாக் என்ற உலகின் முதல் விமானம், 12 விநாடிகள் மட்டுமே பறந்தது. அது பறந்த தொலைவு 36 மீட்டர்.

6. உலகிலுள்ள வான்வழி விமானப் பாதைகளிலேயே பிரச்சினைகள் குறைந்தது ஆர்டிக்கின் மேற்பகுதி. சிக்கலான பகுதி என்று வடஅமெரிக்காவுக்கு அருகேயுள்ள பெர்முடா முக்கோணப் பகுதி கருதப்படுகிறது.

7. சவூதி அரேபியாவின் அரசர் காலித் 747 எக்சிகியூட்டிவ் ஜெட் ஒன்றை வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 750 கோடி. இந்த ஜெட் விமானத்தில் அவரது சிம்மாசனத்தை வைக்க ஒரு தனியறையும் ஒரு மருத்துவ அறையும் உண்டு. மருத்துவ அறையில் இருந்து அமெரிக்காவில் கிளீவ்லாண்டில் உள்ள மருத்துவமனையுடன் செயற்கைக்கோள் தொடர்பு வசதி உண்டு.

8. இரண்டாவது உலகப் போருக்கு முன்னர் வரை அனைத்து விமானங்களும் புரொபெல்லர் மூலமே இயங்கி வந்தன. இரண்டாம் உலகப் போரின்போது, சில போர் விமானங்களில் ஜெட் விமான இன்ஜின் பயன்படுத்தப்பட்டது. இப்போது பறந்துகொண்டிருக்கும் பெரும்பாலான விமானங்கள், ஜெட் விமானங்களே.

9. விமான புரொபெல்லரின் இயங்கும் தத்துவம் என்னவென்றால், ஒரு செயல்பாடும், அதற்கான எதிர்வினையும் சமமான அளவுடன் இருக்கும். அதேநேரம் எதிர்வினை, செயல்பாட்டுக்கு எதிராகவும் இருக்கும். இந்தத் தத்துவத்தைப் புரொபெல்லர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே ஐசக் நியூட்டன் கண்டறிந்து விளக்கிவிட்டார்.

10. விமானத்தில் உள்ள கழிப்பறைகள் மிகவும் செலவு மிகுந்தவை. அதில் அடங்கியுள்ள சிக்கலான குழாய் அமைப்பு அப்படி. வானில் பறப்பதால் விமானத்துக்குள் அழுத்தம் அதிகமாக இருப்பதன் காரணமாக, தண்ணீரைச் சூடாக்குவதற்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படும். விமானக் கழிப்பறையில் தண்ணீர் முற்றிலும் உறிஞ்சப்பட்டு, விமானத்தில் இருந்து 933 கி.மீ. வேகத்தில் வெளியேற்றப்படும். இது உடனடியாகப் பனிக்கட்டியாக மாறிவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்