இது எந்த நாடு? - 91: துணிச்சல் மிக்க நாடு

By ஜி.எஸ்.எஸ்

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள  நாடு.

2. 1990-ல் தென்னாப்பிரிக்காவிடமிருந்து விடுதலை பெற்றது.

3. சிறுத்தைகள் அதிகம் இருக்கும் 6 ஆப்பிரிக்க நாடுகளில் இதுவும் ஒன்று.

4. ’துணிச்சல் மிக்க நாடு’ என்ற பெயரும் இதுக்கு உண்டு.

5. வைரம், செம்பு, யுரேனியம், தங்கம், காரீயம், லித்தியம் போன்றவை இந்த நாட்டின் இயற்கை வளங்கள்.

6. இதன் தலைநகரம் விந்தோக்.

7. அரசியல் அமைப்புச் சட்டத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பை அறிமுகப்படுத்திய முதல் நாடு இதுதான்.

8. இந்த நாட்டின் தேசிய விலங்கு ஆப்பிரிக்க இரலை (Oryx).

9. இங்குள்ள மிக உயரமான மலை பிரான்ட்பர்க்.

10. உலகின் பழமையான பாலைவனங்களில் ஒன்றான நமீப் பாலைவனத்தின் பெயரைத்தான் இந்த நாட்டுக்கும் வைத்திருக்கிறார்கள்.

விடை:  நமீபியா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

45 mins ago

வாழ்வியல்

36 mins ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்