முயலுடன் மோதும் மூன்று பேர்

By ஜெய்

காட்டுக்கு (Forest) போயிருக்கீங்களா? காடுன்னா மரங்கள், செடி, கொடிகள், புலி, கரடி, மான், யானை போன்ற விலங்குகள் இருக்கிற இடம். சென்னையில நம்ம கவர்னர் மாளிகை இருக்குற ராஜ் பவனைச் சுத்திக் காடுதான் இருக்குது. அங்க புலி, யானை எல்லாம் இருக்குமான்னு கேட்குறீங்களா? இல்லை. எல்லாக் காட்டுலயும் புலி இருக்காது.

ஊட்டி போயிருக்கீங்களா? அங்க இருக்குற காட்டுல புலி, யானை, சிறுத்தை , கரடி, மான் என எல்லா விதமான விலங்குகளும் இருக்கு. வண்டலூரிலும் எல்லாவிதமான விலங்குகளும் இருக்குது. ஆனால் அது காடு இல்லை. மிருகக் காட்சி சாலை.

சரி, கதைக்கு வருவோம். மேலே சொன்ன மாதிரி ஒரு காடு. அந்தக் காட்டுல ஒரு முயல் குட்டி இருந்துச்சு. குட்டின்னதும் நீங்க நினைக்கிற மாதிரி அணில் அளவுக்கு நினைக்காதீங்க. இந்த முயல் நல்லா நொறுக்குத் தீனி சாப்பிடும் முயல். உங்கள மாதிரி லேஸ், பிங்கோ எல்லாம் சாப்பிடாது.

காட்டுல கிடைக்கிற செடி, கொடி, பழங்கள் எல்லாத்தையும் சகட்டு மேனிக்குச் சாப்பிடும். அதனால ரொம்ப குண்டா இருக்கும். அதைப் பார்த்தால் முயல் குட்டி மாதிரியே தெரியாது. நல்லா குண்டா, உயரமான கரடி மாதிரி இருக்கும்.

அது இவ்ளோ பெரிய உருவமாக இருந்தாலும், அதுவும் உங்கள மாதிரி குழந்தைதானே. உங்களுக்கு வண்ணத்துப் பூச்சி ரொம்ப பிடிக்கும்ல. அதுபோல இந்தக் குட்டிக்கும் வண்ணத்துப் பூச்சினா ரொம்ப பிடிக்கும். அது மாதிரி பூக்கள்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும். காலையில எழுந்ததும் பூக்களைப் பார்த்துச் சந்தோஷப்படும்.

இப்படி சந்தோஷமா பிடிக்கிறத சாப்பிட்டுட்டு, வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்தி விளையாடிட்டு, நைட்டு போயி அதோட வீட்ல தூங்கும். வீடுன்னா, நம்மள மாதிரி இல்ல. மரத்துக்கு அடில ஒரு சின்ன பொந்து தோண்டி வைச்சிருக்கும். அதான் அதோட வீடு. இப்படி ஜாலியா இருக்குற முயலுக்கு ஒரு சேட்டைக்கார கும்பலால தொல்லை வந்துச்சு.

உங்க ஸ்கூல்ல சேட்டை பண்ற பசங்க இருப்பாங்கல்ல. அது மாதிரி ஒரு மூணு ஃப்ரண்ட்ஸ். எலி, அணில், ராக்கூன் இவை எல்லாம்தான் அந்தத் தொல்லைக்கார கும்பல்.

இதுங்க எல்லாம் சேர்ந்து நம்ம ஹீரோ முயல தொந்தரவு பண்ணுதுங்க. முயலோட செல்லமான வண்ணத்துப் பூச்சிய கொன்னுடுதுங்க. முயல் குட்டி மேல பழங்களைக் கொண்டு எறிந்து, அது பயப்படுறதப் பார்த்து ரசிக்குங்க.

இது மட்டுமில்லாம மரத்துல ஏறி அங்க இருக்குற மற்ற பறவைகளையும் தொந்தரவு பண்ணுங்க. இதுங்கள கண்டு பயந்து ஓடும் நம்ம ஹீரோ கடைசியா இதுங்கள ஜெயிக்க ஒரு ப்ளான் போடுது.

அது என்ன ப்ளான், எப்படி ஜெயிச்சதுன்னு தெரிஞ்சுக்க ‘Big Buck Bunny’ படம் பாருங்க.

https://www.youtube.com/watch?v=YE7VzlLtp-4

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

வணிகம்

13 mins ago

இந்தியா

15 mins ago

சினிமா

21 mins ago

ஓடிடி களம்

53 mins ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

மேலும்