பொம்மைகளின் கதை: பொம்மைக்குள் பொம்மைக்குள் பொம்மை

By ஷங்கர்

 

ரு பொம்மை. அதன் வயிற்றுப் பகுதியைத் திறந்தால் இன்னொரு பொம்மை. அந்தப் பொம்மையைத் திறந்தால் இன்னொரு குட்டி பொம்மை. இப்படி ஆறு பொம்மைகளைத் தன் வயிற்றுக்குள் வைத்திருக்கும் ஏழாவது பெரிய பொம்மைதான் மத்ரியோஷ்கா. அன்னை என்ற அர்த்தம் வரும் லத்தீன் வார்த்தையான மேட்ரனிலிருந்து திரிந்து இந்தப் பெயர் வந்துள்ளது. ரஷ்யாவைப் பூர்விகமாகக் கொண்ட உலகெங்கும் புகழ்பெற்ற பொம்மை இது.

வெங்காயத்தின் மேல்தோலைப் பிரித்தால் இன்னொரு வெங்காயம். இன்னொரு தோலைப் பிரித்தால் இன்னொரு வெங்காயம். உரிப்பதும் வெங்காயம், கிடைப்பதும் வெங்காயம். அதைப் போலத்தான் மத்ரியோஷ்காவுக்குள் அதே வடிவில் சின்னப் பொம்மைகள் திறந்து கொண்டேயிருக்கின்றன.

வஸீலிவிச் பெட்ரோவிச் ஜ்வெஸ்டோக்கின், சவ்வ அய்வனோவிச் மமோன்தவ் இருவரும் சேர்ந்து 1892-ல் வடிவமைத்த பொம்மை இது. குண்டான இளம் கிராமத்து ரஷ்யப் பெண்ணின் சாயலில் முதல் பொம்மையை உருவாக்கினார்கள். பின்னர் மத்ரியோஷ்காவுக்குப் பாரம்பரிய ரஷ்ய உடையான சராஃபனை அணிவித்து அழகு பார்த்தார்கள்.

1900-வது ஆண்டில் பிரான்சின் தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சியில்தான் மத்ரியோஷ்கா பொம்மை உலகமெங்கும் ரசிகர்களைப் பெற்றது. வெவ்வேறு நாடுகள், கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள் தங்களைக் கவர்ந்த கதைகளின் தாக்கத்தில் மத்ரியோஷ்கா பொம்மைகளை உருவாக்க ஆரம்பித்தனர். தற்போது சர்வதேச தலைவர்களின் உருவத்தில்கூட மத்ரியோஷ்கா பொம்மைகள் கிடைக்கின்றன.

தாயும் குழந்தையும்

அம்மாவே குடும்பத் தலைவராக இருந்த ரஷ்யக் குடும்ப முறையைக் குறிப்பதாக பெரிய பொம்மை அமைந்துள்ளது. அதற்குள் பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் சிறிய பொம்மைகளாக உள்ளன. அதனடிப்படையில் தாய்மையின் அடையாளமாகவும் மத்ரியோஷ்கா உள்ளது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் பல அனுபவங்களையும் சந்தோஷங்களையும் துக்கங்களையும் கடக்கிறான். ஒரு மனிதன்; பல அனுபவங்கள்; இதைக் குறிப்பதாகவும் மத்ரியோஷ்கா பொம்மை விளங்குகிறது.

மத்ரியோஷ்காவைச் செய்யும் கைவினைக் கலைஞர்கள் ஒரு பொம்மையைப்போல் இன்னொரு பொம்மையை உருவாக்குவதில்லை. ஒவ்வோர் அன்னையையும் தனித்தனியாகவே உருவாக்குகிறார். நமது அம்மாக்களும் பிறரோடு ஒப்பிட முடியாத அளவுக்குத் தனித்துவமானவர்கள்தானே!

நீங்கள் மாஸ்கோவுக்குப் போக நேர்ந்தால் இஸ்மய்லோஸ்கயா சந்தைக்குப் அவசியம் செல்லுங்கள். அங்கே உங்களுக்கான மத்ரியோஷ்கா கிடைப்பார்.

தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்