‘என் சென்னை யங் சென்னை’ விருதுகள்!

By நிஷா

சென்னைக்கு மூப்பே கிடையாது. தன் வசீகரத் தோற்றத்தாலும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தாலும் நம் சென்னை ஆண்டுதோறும் இளமையாகிக் கொண்டே வருகிறது. இந்தப் பெருநகரமும் இங்குள்ள வாழ்க்கைச் சூழல்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒன்று சேர்ந்து உழைக்கும் சென்னை இதயங்களின் உணர்வைக் கொண்டாடும் ஒரு முயற்சியே ‘என் சென்னை யங் சென்னை’. ஆகஸ்ட் 22 அன்று சென்னை தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்ட நாளில், ‘என் சென்னை யங் சென்னை’ எனும் விழா முன்னெடுப்பு இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தது.

சென்னையின் நினைவுச் சின்னங்களையும், சென்னையின் எழிலையும் கொண்டாடுவது அவசியம்தான். அதைவிடவும் சென்னையின் மனிதர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்பதை ’என் சென்னை யங் சென்னை’ பெரிதும் விரும்புகிறது. இந்தப் பின்னணியில்தான் சென்னையை ரசித்து நேசித்து வாழ்ந்து வரும் அனைவரும் இணைந்து சென்னைக்குச் சிறப்புச் செய்யும் திருவிழாவாக ‘என் சென்னை யங் சென்னை’ உருவெடுத்திருக்கிறது.

கடந்த ஆண்டில், வந்தாரை வாழவைக்கும் சென்னையின் பெருமையைக் கூறும் சென்னை கீதத்தை அது அறிமுகப்படுத்தியது. அதோடு, ஆக்கமும் ஊக்கமும் நிறைந்த சென்னை இளைஞர்களின் துடிப்பான செயல்பாடுகளைப் போற்றும் விதமாக விருதுகளை அது வழங்கியது. சென்னையின் உதவிக்கரமாக நீளும் இந்த இளைஞர்களுக்கு மரியாதை செய்யும் விருதுகள் சென்னைக்காக - சென்னையால் - சென்னைக்கு என்கிற கோணத்தில் அளிக்கப்பட்டன. மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தி, சென்னையை மீட்டெடுத்தவர்களை இந்த விருதுகள் மூலம் இது அடையாளப்படுத்துகிறது.

இந்த ஆண்டு ஜூன் 25 அன்று தொடங்கிய ‘என் சென்னை யங் சென்னை’ விழா, செப்டம்பர் 10 வரை தொடர்ந்து நிகழ்கிறது. சென்னை காவல்துறை ஆணையர் திரு. சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ் இந்த ஆண்டின் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார். சென்னையின் மனித மதிப்பீடுகளை உயர்த்திப் பிடிக்கும் வகையில் இந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னையின் பல்வேறு குடியிருப்புகளிலும் ‘என் சென்னை யங் சென்னை’ இடம் பிடித்தது. இந்த விழாவின் இறுதி நாளில், செப்டம்பர் 10 அன்று ஒரு மாபெரும் நிகழ்வாக உள்ளரங்கு மாரத்தான் ஓட்டம் நடைபெறவிருக்கிறது.

சென்ற ஆண்டைப்போலவே சமூகப் பணிக்கான விருதுகளோடு, இந்த ஆண்டு கூடுதலாக இரு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. வணிகத் துறை சாதனையாளர்களும் தமிழ் திரைத்துறை சாதனையாளர்களும் கவுரவிக்கப்பட்டார்கள். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ட்ரீம் தமிழ்நாடு, ஆரஞ்ச்ஸ்கேப் நிறுவனர் சுரேஷ் சம்பந்தம், பத்மஸ்ரீ கலைமாமணி டாக்டர் நல்லி குப்புசாமி ஆகியோர் இந்த விருதுகளை வழங்கி, நம் சென்னையின் சாதனையாளர்களைப் பாராட்டினர்.

இந்த ஆண்டு விருது பெற்ற சாதனையாளர்களின் பட்டியல் கீழே:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்