இமாலய இப்தார் விருந்து

By செய்திப்பிரிவு

ஆசியாவிலேயே பெரிய இப்தார் விருந்தை ஸ்ரீ நகரின் தல் ஏரிக் கரையில் கடந்த சனிக்கிழமை அன்று ஆயிரக்கணக்கானோர் உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். சுமார் 1.6 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்த விருந்தின் பதார்த்தங்கள் விரிக்கப்பட்டிருந்தன.

இதற்கு முன்னர் சார்ஜாவில் 1.3 கிலோ மீட்டர் நீளத்துக்கு நீண்டிருந்த விருந்தே மிகப் பெரியதாக இருந்தது. சுமார் 3,500 பேர் ஸ்ரீ நகர் விருந்தில் கலந்துகொண்டார்கள்.

பிரியாணி, பேரீச்சை, பழங்கள், பழச் சாறு வகைகள் எனப் பலமான விருந்து. என்ன வாயில் எச்சில் ஊறுகிறதா?

ஊர் சுற்றும் வீடற்ற பையன்

பிலிப்பைன்ஸ் நாட்டில் வாழும் டேனியல் கேப்ரிரா என்னும் ஒன்பது வயதுச் சிறுவனுக்கு இருக்க வீடில்லை. அவன் மெக்டொனால்டு உணவக வெளிச்சத்தின் உதவியால் வீட்டுப் பாடத்தைப் படிக்கும் காட்சி ஒன்று ஃபேஸ்புக்கில் வெளியானது. கேட்கவா வேண்டும், வீடற்ற சிறுவன் கிடைக்கும் வெளிச்சத்தில் படிக்கும் காட்சி தாறுமாறாக ஷேர் ஆகியது. வைரலாக ஃபேஸ்புக்கில் பரவியுள்ள அந்தப் படத்தால், வசிக்க வீடில்லாத டேனியலுக்கு நன்கொடையும் பெருமளவில் கிடைத்துவருகிறதாம். சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார் டேனியலின் தாய்.

வாட்ஸ் அப்புக்குத் தடையா?

விரைவில் இங்கிலாந்தில் வாட்ஸ் அப் மெஸேஜிங் சேவைக்குத் தடைவிதிக்கப்பட்டுவிடலாம் என்று தெரிகிறது. மக்களுக்கிடையே சங்கேத முறையில் பரிமாறப்படும் செய்திகளைத் தடுக்கும் பொருட்டு புதிய சட்டங்களை இயற்ற உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். இதனால் இன்னும் சில வாரங்களில் வாட்ஸ் அப், ஐமெஸேஜ், ஸ்னேப்சாட் ஆகிய மெஸேஜிங் சேவைகள் இங்கிலாந்தில் தடைசெய்யப்பட்டுவிடலாம். நல்ல வேளை நாம் இந்தியாவில் இருக்கிறோம்.

பீர் பிரியர்களா டெல்லிவாலாக்கள்

எதையும் கூலாகத் தேட நாம் கூகுளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் டெல்லிவாசிகள் கூலான பீரையே கூகுளில்தான் தேடுகிறார்களாம். கூகுளில் கடந்த மே ஜூன் மாதங்களில் டெல்லிவாசிகள் தேடிய சொல் பீர்தானாம். இதைத் தொடர்ந்து ஹாட்டான ஒயின், விஸ்கி ஆகியவை உள்ளன. ஜூலை 2-8 நாட்களின் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், ஆல்கஹால் திரவங்களின் தேடல் வீக் எண்ட்களில் அதிகம் உள்ளது என்கிறது கூகுள். அதுவும் நடுராத்திரியிலிருந்து அதிகாலைக்குள் அதிகமாகத் தேடுகிறார்களாம். தாகமெடுத்தால் என்ன செய்ய முடியும்?

தொகுப்பு: ரோஹின்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்