காமிக்ஸ் தில்லுமுல்லுகள் 10: ஸ்பைடர்மேன் போய் ஸ்பைடர் வந்தார்

By கிங் விஸ்வா

செந்திலார்: என்னண்ணே, ரெண்டு மாசமா காமிக்ஸ் உலகத்துல காப்பிரைட் பிரச்சினையைப் பத்தித்தான் பேசுறாங்களாமே, அப்படியா?

கவுண்டமணியார்:ஆமான்டா. ஆனால், அது உண்மையான காப்பிரைட் பிரச்சினை. நம்ம ஊர் மாதிரி கதைகளைத் திருடி, அதனால வர்ற பிரச்சினை இல்லை.

செந்திலார்: அது என்னண்ணே உண்மையான காப்பிரைட் பிரச்சினை?

கவுண்டமணியார்: போன மாசம், அமெரிக்கால இருக்குற டி.சி. காமிக்ஸ், தன்னோட ரெண்டு கதாநாயகர்களின் கதைகளை ஒண்ணா ஒரே கதைல வர்ற மாதிரி ஒரு நாலு பாகக் கதைத் தொடரை வெளியிட்டாங்க. பேட்மேன் & ஃபிளாஷ்னு ரெண்டு ஹீரோக்களும் ஒண்ணா, ஒரே கதையில வந்தாங்க.

செந்திலார்:அடடே, நம்ம ரஜினி-கமல் மாதிரியா, சூப்பர்ணே.

கவுண்டமணியார்:ஆனா, அந்த புத்தகம் அமெரிக்காவுல ஒரு அட்டையுடனும், ஐரோப்பாவுல வேற ஒரு அட்டைப்படத்துடனும் வந்துச்சு. அதுக்குக் காரணம் என்னன்னா, அதனோட அட்டையில ஸ்மைலி பட்டன் இருந்துச்சு. அந்த ஸ்மைலியை பிரான்ஸ்ல இருக்குற ஒரு கம்பெனி தன்னோட காப்பிரைட்டுன்னு பதிவு செஞ்சு வச்சிருக்கு. அதனால, அமெரிக்காவுல ஒரு அட்டைப்படம் (இங்கே பிரான்ஸ் நாட்டு காப்பிரைட் செல்லாது), ஐரோப்பாவுல அந்த ஸ்மைலி இல்லாம வேற அட்டைப்படம்.

செந்திலார்:அடேங்கப்பா அவ்வளவு ஸ்ட்ரிக்டாவா இருக்காங்க? அண்ணே, அதே மாதிரி போன மாசம் நம்ம மார்வல் ஸ்டுடியோவோட அயர்ன்மேன் படத்தோட போஸ்டர் பத்திகூட ஏதோ வழக்குன்னு...?

கவுண்டமணியார்: அட, பரவாயில்லையே. நீ கூட இதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கியே?

செந்திலார்: என்னண்ணே, நானும் காமிக்ஸ் படிச்சிட்டுதானே இருக்கேன். இனிமேல நானும் அந்த விஷயமெல்லாம் தெரிஞ்சுக்குவேண்ணே.

கவுண்டமணியார்: அதாவது, 2001-ல ரெட்டிக்ஸ்னு ஒரு காமிக்ஸ் கதை வந்துச்சு. அதை படைத்தவர்கள் பென் & ரேய் என்று இரண்டு சகோதரர்கள். அவங்களோட காமிக்ஸ் அட்டைப்படத்துக்கும் அயர்ன்மேன்-3 படத்தோட போஸ்டர் டிசைனுக்கும் இருக்குற ஒத்துமையை வச்சு ஒரு காப்பிரைட் கேஸ் போட்டு இருக்காங்க. அந்த வழக்கும் இப்போ பரபரப்பா ஓடிட்டு இருக்கு.

செந்திலார்: அண்ணே, அந்த படத்தோட போஸ்டருக்கும் இன்னைய தில்லுமுல்லுவுக்கும் ஏதாச்சும் தொடர்பு இருக்காண்ணே?

கவுண்டமணியார்: இல்லாமயா இவ்வளவு நேரமா அதப் பத்தி பேசிட்டு இருந்தோம்? அதுக்கு முன்னாடி, உனக்கு ஸ்பைடர்மேன் பத்தித் தெரியுமா?

செந்திலார்: என்னண்ணே இப்படிக் கேட்டுப்புட்டீங்க? நானெல்லாம் ஸ்பைடர்மேன் ஃபேன், தெரியாதா? அதான் அடுத்த மாசம் ஸ்பைடர்மேனோட புதுப்படம்கூட வருதேண்ணே?

கவுண்டமணியார்: அடேய், அந்த ஸ்பைடர்மேன் காமிக்ஸ் மொத மொதல்ல 1962-ம் வருஷம் வந்துச்சு. அந்த அட்டைப்படத்தை ஓவிய மேதை ஜாக் கிர்பி வரைஞ்சாரு. அந்த அட்டைப்படம் உலகம் முழுக்க இன்னிக்கும் கொண்டாடப்படுது.

செந்திலார்: நல்ல விஷயம்ணே. ஆனால், அதுக்கும் இன்னைக்கு நாம பேசற தில்லுமுல்லுக்கும் என்ன சம்பந்தம்?

கவுண்டமணியார்: கண்ணா, அதே அட்டைப்படத்தை எடுத்து, லைட்டா பட்டி, டிங்கரிங் செஞ்சு, அதையே நம்ம ஸ்பைடரோட கதைக்கு அட்டைப்படமா போட்டுடுச்சு சிவகாசி காமிக்ஸ் நிறுவனம். அப்புறமா பத்து வருஷம் கழிச்சு, அதே அட்டைப்படத்துல இன்னும் கொஞ்சம் பட்டி டிங்கரிங் செஞ்சு, மறுபடியும் இன்னொரு ஸ்பைடர் கதைக்கு அட்டைப்படமா போட்டுட்டாங்க. நல்லவேளை, இந்தத் தில்லுமுல்லுகளையெல்லாம் பாக்காம, ஜாக் கிர்பி அதுக்கு ஒரு வருஷம் முன்னாடியே மேல போய்ட்டாரு.

செந்திலார்: அடேங்கப்பா. ஸ்பைடர்மேன் கிட்டயே இப்படி விளையாடிட்டாங்களா?

கவுண்டமணியார்: இல்லை, ராஜா. இவங்க கேப்டன் அமெரிக்கா கூடவே விளையாடினவங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி டெக்ஸ் வில்லர் அட்டைப்படக்துக்கு பிரபல ஓவியர் போரிஸ் வல்லேயோவோட ஓவியத்தை ‘சுட்டு’ட்டாருன்னு எழுதினோம்ல? அந்த போரிஸ் வல்லேயோவோட மனைவியான ஜுலி பெல்லும் ஒரு பிரபல ஓவியர். கேப்டன் அமெரிக்காவோட சீட்டு அட்டை, ஸ்பெஷல் போஸ்டர் எல்லாம் ஜூலி பெல் வரைஞ்சு கொடுத்தாங்க.

அதெல்லாம் இப்பவும் ஒரு அட்டை 1,600 ரூபாய்க்கு விக்குது. அந்த கேப்டன் அமெரிக்கா கிட்ட எடுத்து, இரும்புக் கை மாயாவியோட அட்டைன்னு போட்டுட்டாங்க. இவ்வளவு வாரமா நம்ம தில்லுமுல்லு தொடரப் படிச்ச வாசகர்கள் காப்பிரைட் பத்தி கொஞ்சமாச்சும் தெரிஞ்சுகிட்டு இருப்பாங்கன்னு நெனைக்குறேன்.

செந்திலார்: ஆமாண்ணே, இனிமே நாணும் காப்பிரைட்டுக்கு குரல் கொடுப்பேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

மேலும்