மாயப்பெட்டி: ஜீரண சக்தி!

By ஆபுத்திரன்

‘கல்யாணம் முதல் காதல்வரை’ என்ற தொடருக்கான (ஸ்டார் விஜய்) அறிவிப்பு. திடீரென்று குளோஸ்-அப்பில் காட்டப்பட்ட ஓர் இளம் பெண் நம்மைப் பார்த்து, “இனிமே நான்தான் உங்க ப்ரியா” என்றார் உரிமையுடன். அடுத்து “ப்ரியாம்மா” என்றபடி ஓடிவந்து அவரைக் கட்டிக் கொண்டாள் ஒரு சிறுமி. “நெடிதுயர்ந்த நடிகர் அமீத் ப்ரியா” என்றபடி அந்தப் பெண்ணின் கன்னத்தோடு கன்னம் வைத்தார். அதாவது இதுவரை அந்தத் தொடரில் நாயகியாக நடித்து வந்த ப்ரியா என்ன காரணத்தினாலோ இனி அதில் நடிக்கப்போவதில்லை. “அவருக்குப் பதிலாக இவர்”. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் ரசிகமகா ஜனங்களின் ஜீரண சக்திக்கு ஒரு சல்யூட்.

நழுவிய அர்னாப்

டைம்ஸ் நவ் சேனலில் கருப்புப் பண வேட்டை விவாதம். “1000, 500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அடைந்துவரும் சொல்லொணாத் துயரை எதிர்க்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொள்கிறார்கள்” என்று கருத்து தெரிவித்தார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அர்னாப் கோஸ்வாமி. Opposition parties are preying on the feelings of common men என்று கர்ஜித்துவிட்டு, P..R..E..Y..I..N..G.. என்று ஒவ்வொரு எழுத்தாகவும் உச்சரித்தது புத்திசாலித்தனம். (Praying என்றால் அர்த்தம் வேறாகிவிடும்). ஆனால் “நீங்கள் இந்தச் சேனலிலிருந்து விலகப்போவதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. அதைப் பற்றிய உங்கள் நிலை என்ன? Nation wants to know” என்று பங்கற்பாளர் ஒருவர் அவரிடம் கேட்டு சங்கடப்படுத்த, அதற்குப் பதில் கொடுக்கப்படவில்லை.

கதை உத்தி

குறிப்பிட்ட வேகத்துக்குக் குறைவாக ஒரு பேருந்தைச் செலுத்தினால் அது வெடித்து விடும் என்பதுபோல் திட்டமிட்டிருக்கிறான் வில்லன். இந்த ஒரு வரி சிக்கலை வைத்துக் கொண்டு ஒரு படம் முழுவதும் தொய்வில்லாமல் வேகமாகப் பயணிக்கும் சாதனையை ஸ்டார் மூவிஸில் ஒளிபரப்பான ‘ஸ்பீட்’ திரைப்படத்தில் ரசிக்க முடிந்தது. ஒளிப்பதிவுக் கோணங்கள், படத்தொகுப்பு எனப் பலவிதங்களில் நம்மை வசப்படுத்துகிறது இந்தப் படம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

33 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்