வசந்த நவராத்திரி

By ராஜி ராதா

ஏப்ரல் 2ம் நாள் தொடங்கி ஏப்ரல் 11 வரை வட மாநிலங்களில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. ‘சைத்ர நவராத்திரி’ என்றும் இதனை அழைப்பர். நான்கு நவராத்திரிகளில் வட நாட்டில் இரு நவராத்திரிகளுக்கு முக்கியத் துவம் கொடுத்து கொண்டாடுவர். அதிலும் வசந்த நவராத்திரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவர்.

துர்க்கையின் அவதாரம்

அரக்கன் மகிஷாசுரன், ஒரு கட்டத்தில் மகா அரக்கனாக மாறி, மக்கள், ரிஷிகளைத் தாண்டி, தேவர்களையும் துன்புறுத்த ஆரம்பித்தான். இனி தாங்காது என்கிற நிலையில் சக்தியே புது வடிவம் எடுத்தாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் சக்திகளை துர்க்கைக்கு அளித்து மகிஷாசுரனை சம்ஹாரம் செய்யக்கூறினர். துர்க்கையும் ஆக்ரோஷமாகச் சண்டையிட்டு மகிஷனை சம்ஹாரம் செய்தாள்.

அப்போது சக்தி, “பூமியில் இன்னும் பல அரக்கர்கள் இருக்கிறார்கள். அதனால், நீ நிரந்தரமாகப் பூலோகத்தில் தங்கி தேவைப்படும் போதெல்லாம் சம்ஹாரம் செய்து மக்களையும் சந்நியாசிகளையும் காக்க வேண்டும்” எனக் கூறி பூலோகத்திலேயே துர்க்கையை நிரந்தரமாகத் தங்கவைத்துவிட்டாள்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் துர்க்கை பல வடிவங்களை எடுத்து அரக்கர்களை அழித்தாள். அவற்றில் ஒன்பது மிகவும் விசேஷம், அவையே நவராத்திரியின்போது பூஜித்து வணங்கப்படுகின்றன. இந்த ஒன்பது வடிவங்கள் சில இடங்களில் மாறுபடும். ஆனால், அடிப்படையில் அவை அனைத்துமே சக்தி, துர்க்கை என உணர்தல் அவசியம்.

வட நாட்டில் வசந்த நவராத்திரியின் நவமியன்று ஸ்ரீராம நவமி, அதாவது ராமன் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. வட நாட்டைப் பொறுத்தவரை வசந்த நவராத்திரிக்கும் ராமரின் மூதாதையருக்கும் சம்பந்தம் உண்டு.

ஒருகாலத்தில் கோசலா நாட்டை துருவசிந்து என்கிற மன்னர் ஆண்டுவந்தார். அவனுக்கு இரு மனைவியர். மன்னன் துருவசிந்து இறந்தபோது, முறைப்படி அவனுடைய முதல் மனைவியின் மகன் சுதர்சன்தான் மன்னனாக முடிசூடியிருக்க வேண்டும். ஆனால், மன்னனின் இரண்டாவது மனைவி சதிசெய்து தன் மகனை மன்னனாக்கியதுடன், சுதர்சனையும் அவன் அம்மாவையும் காட்டிற்கு விரட்டினார்.

சுதர்சனும் அவனுடைய தாயாரும் பரத்வாஜர் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்தனர். அன்று முதல் சுதர்சன், சக்தி வழிபாட்டில் ஈடுபட்டான். அவனுடைய பக்தியை மெச்சி, துர்க்கை காட்சி தந்ததுடன், சிற்றன்னையின் சதியை வென்று அவன் மன்னன் ஆவதற்குத் தேவையான சக்திகளை வழங்கினார்.

சுதர்சன் சக்திமிக்கவனாக மாறியதைக் கண்டு காசி மன்னன் தன் மகள் கோசலையைத் திருமணம் செய்து கொடுத்தான். இதனால் கோசல மன்னன் சண்டைக்கு வந்தான். போரில் அவனைக் கொன்ற சுதர்சன், கோசலா நாட்டின் தலைவன் ஆனான். வெற்றிக்கு உதவிய துர்க்கைக்குப் பத்து நாட்கள் விழா எடுத்தான். இதுதான் பல மாற்றங்களோடு இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

கலசத்தில் துர்க்கை

வசந்த நவராத்திரியின் எட்டாவது நாளில் ஒரு சிறுமியைக் கடவுளாக எண்ணி பூசித்து, பாவாடை, சட்டை, வளையல் உட்படப் பலவற்றை வாங்கிக் கொடுத்து விருந்து வைத்து அனுப்புகின்றனர்.

வரலட்சுமி விரத பூசைபோல் கலசத்தில் துர்க்கையை வடிப்பது நம்முடைய மரபில் வருகிறது. நவராத்திரி முழுவதும் கலசத்தில் துர்க்கை வாசம் செய்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேற்கு வங்கம், திரிபுரா, அசாம் போன்ற மாநி லங்களில் வசந்த நவராத்திரியில் வரும் நவமியை ராமநவமியாகக் கொண்டாடுகின்றனர். அந்த நாளில் ராமாயணம் பாராயணம் செய்யப்படுகிறது.

நான்கு நவராத்திரிகள்

# ஆடி மாத அமாவாசைக்குப் பின் ஆஷாட நவராத்திரி, புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் சாரதா நவராத்திரி ஆகியவை கொண்டாடப் படுகின்றன.

# தை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமையைத் தொடர்ந்து கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி.

# பங்குனி மாத அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை தொடங்கி கொண்டாடப்படும் நவராத்திரி வசந்த நவராத்திரி. இது மார்ச் - ஏப்ரலில் கொண்டாடப்படுவது. இந்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 11-ம் தேதிவரை வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்