வேலை வேண்டுமா?- விமான நிலைய ஆணையத்தில் பணி

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

த்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையத்தில் (Airports Authority of India) இளநிலை நிர்வாகி (Junior Executive) என்ற பதவியில் பொறியியல் பட்டதாரிகள் நேரடி நியமன முறையில் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

மொத்தம் 200 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிவில் இன்ஜினீயரிங் பிரிவில் 50 காலியிடங்களும் எலெக்ட்ரிக்கல் பிரிவில் 50 இடங்களும், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் 100 காலியிடங்களும் இடம்பெற்றுள்ளன. மினி ரத்னா அந்தஸ்து கொண்ட இந்நிறுவனம் மத்திய அரசு நிறுவனம் என்பதால் காலியிடங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய இட ஒதுக்கீடு உண்டு.

தேவையான தகுதி

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பொறியியல் பிரிவில் முதல் வகுப்புடன்கூடிய பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு 2016 ‘கேட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். வயது வரம்பு 27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மத்திய அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் 2016 ‘கேட்’ நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வோ நேர்முகத் தேர்வோ குழு விவாதமோ கிடையாது. இளநிலை நிர்வாகி பதவிக்குத் தேர்வுசெய்யப்படுவோருக்கு ஆரம்ப நிலையில் ரூ.60 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும். உரிய கல்வித் தகுதியும் வயதும் உடைய பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இந்திய விமான நிலைய ஆணையத்தின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : அக்டோபர் 17

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்