விண்வெளி வீரர்களுக்குப் புதிய சிற்றுண்டி

By ஷங்கர்

அப்பல்லோ விண்கலக் காலத்திலிருந்து விண்வெளி வீரர்களுக்குக் கொடுக்கப்படும் உணவுகள் அளவில் சிறியவையாகவும் சத்துமிக்கவையாகவும் இருப்பதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நிலவைத் தாண்டி ஆராய்ச்சி செய்யும் ஓரியன் விண்கலத்தில் பயணம் செய்யும் விண்வெளி வீரர்களுக்காகக் காலை உணவு பார்களை நாசா விண்வெளி நிலையத்தில் உருவாக்க முயன்று வருகின்றனர். விண்வெளி வீரர்கள் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க இந்த ‘ப்ரேக்ஃபாஸ்ட் பார்கள்’ செய்யப்படவுள்ளன. அத்துடன் தொடர்ந்து சாப்பிட்டாலும் ருசியிலும் சலிக்காத வண்ணம் இந்தப் புதிய பார்கள் இருக்கும்.

1998-ல் உருவாக்கப்பட்ட சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் (The International Space Station) மாட்டிறைச்சித் துண்டங்கள், ஹாம்பர்கர்கள், பழங்கள், எஸ்பரசோ காபி உட்பட 200 உணவுப் பொருட்களை வைத்துக்கொள்ள இடமிருந்தது.

ஒரேயொரு உணவு அலமாரி

ஆனால் ஓரியன் போன்ற நவீன விண்கலங்கள் மிகவும் சிறியவை என்பதால் ஒரேயொரு உணவு அலமாரி யும் உணவு பண்டங்களைச் சூடாக்கும் ஒரு அவன்(oven)-ம் வைப்பதற்கு மட்டுமே இடம் இருக்கிறது. நிலவையும் தாண்டி ஆழமான வெளியில் ஆய்வுகளை நடத்துவதால் எடை மிகவும் குறைவாக இருக்க வேண்டியது அவசியம். தொலைதூர ஆய்வுப் பயணம் என்பதால் உணவுகளைத் திரும்பப் பூமியிலிருந்து வழங்குவதற்கும், அதிகமாகக் குப்பைகளைச் சேமித்து வைப்பதற்கும் வாய்ப்பு கிடையாது.

அதனால்தான் நாசாவில் காலை உணவுக்காக உணவு பார்களை விண்வெளிப் பயணிகளுக்கு வழங்குகிறார்கள். சமச்சீரான ஊட்டச்சத்து கொண்ட பிரத்யேகமான முறையில் பாதுகாக்க வேண்டியிராத, அதிகம் பொதியப்பட (பேக்கேஜிங்) வேண்டியிராத உணவுகளுக்கான தொடர்ந்த ஆய்வின் விளைவு இது.

சுவையும் சத்தும்

இப்போது நாசாவால் உருவாக்கப் பட்டுள்ள புதிய காலை உணவு பார்கள் 700 முதல் 900 கலோரிகளும் சமச்சீரான ஊட்டச்சத்தும் கொண்டவை. இதில் ஆரஞ்ச் க்ரான்பெர்ரி, வாட்டியெடுத்த கடலை(barbecue nut) ஆகியவற்றின் சுவையையும் சேர்ப்பதற்குத் தற்போது விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

நாசாவின் ஹியூமன் ரிசர்ச் ப்ரோக்ராம் குழுவினர் இந்தக் காலை உணவு பார்களை உருவாக்கும் பணியில் உதவிவருகின்றனர். அமெரிக்காவின் விண்வெளி அமைப் பான ஹெச் இஆர்ஏ(HERA) வில் உள்ளவர்களுக்கு இந்த உணவு பார்கள் கொடுக்கப்பட்டு அவர்களிடம் அதன் தோற்றம், ருசி மற்றும் சலிக்காத தன்மை ஆகியவை பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்