ஆங்கிலம் அறிவோமே 280: அரசியல்வாதியா, மேதையா?

By செய்திப்பிரிவு

ஜி.எஸ்.எஸ்.

கேட்டாரே ஒரு கேள்வி

Japan, Nippon ஆகிய இரண்டில் எது ஆங்கிலச் சொல்?
இரண்டும் ஒரே நாட்டைத்தான் குறிக்கின்றன. ஜப்பானிய மொழியில் அது Nipponதான். இதற்குப் பொருள் சூரிய உதயம். சீனர்கள் இதைத் தங்கள் மொழியில் ‘ஜிப்பான்’ (Jih-pan) என்றார்கள். சீன மொழியிலும் இதற்குச் சூரிய உதயம் என்றுதான் பொருள். மலாய் மொழியில் இதை ‘ஜபாங்’ என்றார்கள். அது ஐரோப்பிய நாடுகளை அடையும்போது Japan என்று ஆகிவிட்டது. ஆக, இரண் டுமே ஆங்கிலச் சொற்கள் அல்ல.

Cupid என்றால் என்ன?
காதல் கடவுளை ரோமானியப் புராணங்களில் cupid என்பார்கள். இந்தியப் புராணங்களில் மன்மதன், காமன் ​என்றெல்லாம் குறிப்பிடுகிறோமே அதுபோல. Aphrodite என்பது காதலுக்கான கிரேக்கப் பெண் கடவுள்.

“Statesman என்பதற்கும், ​politician என்பதற்கும் என்ன வித்தியாசம்?”
நண்பரே, politician என்பவரை அரசியல்வாதி என்றும் statesman என்பவரை அரசியல் மேதை அல்லது ராஜதந்திரி என்றும் கூறலாம். “அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி நி​னைப்பார். Statesman அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திப்பார்’’ என்றார் அமெரிக்கச் சிந்தனையாளர் ஜேம்ஸ் ஃப்ரீமேன் கிளார்க்.

To face the music என்றால் என்ன?
ஒரு விமர்சனமோ நிலை குலையும்படியான சூழலோ உண்டாகும்போது அதை எதிர்கொள்வதைத்தான் To face the music என்பார்கள்.

“Immemorial என்பதற்கும் immemorable என்பதற்கும் வேறுபாடு உண்டா?”
Immemorial என்றால் மிகப் பழமையான என்று பொருள். This is an immemorial tradition என்றால் பழங்காலத்திலிருந்தே அந்த மரபு பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது என்று பொருள். அதாவது நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்குப் பழங்காலம்.
Memorable என்றால் worth remembering என்று பொருள். சிறப்பான காரணத்துக்காக அது நினைவுகூரத்தக்கது. ‘எளிதில் நினைவு கொள்ளத்தக்க’ என்ற பொருளிலும் memorable என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. Immemorable என்ற சொல்லைப் பலரும் ஏற்பதில்லை. Unmemorable என்று உண்டு. நினைவில்கொள்ள முடியாத என்பது இதற்குப் பொருள்.

போட்டியில் கேட்டுவிட்டால்

Found guilty of murder, he was _________ to death.
(a) confined
(b) related
(c) sentenced
(d) acquitted
(e) executed
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக் குத் ​தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்கிறது வாக்கியம்.
Confined to prison என்று வரலாம். ஆனால், death-க்குள் ஒருவரை அடைத்துவைக்க முடியாதே.

அவர் இறப்புடன் தொடர்புடையவர் (related) என்பது சரியல்ல. He was executed என்றாலேபோதும். அவர் தூக்கிலிடப் பட்டார் என்றுதான் பொருள். Executed to death என்பது தவறு.

Acquitted என்பது விடுவிப்பது. ‘இறப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்’ என்பது நாடகத்தனமாக இருப்பதோடு acquitted என்பதைத் தொடர்ந்து from என்ற preposition வரவே வாய்​ப்பு அதிகம்.

Sentence என்பதற்கு வாக்கியம் என்ற பொருள் இருந்தாலும் அதை verb-ஆகப் பயன்படுத்தும்போது தீர்ப்பு வழங்குதல் என்ற பொருள் வருகிறது. எனவே, Found guilty of murder, he was sentenced to death என்பதே பொருத்தமானது.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 secs ago

இந்தியா

5 mins ago

தமிழகம்

26 mins ago

சினிமா

22 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

46 mins ago

க்ரைம்

52 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்