டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 10

By செய்திப்பிரிவு

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்



261. உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?

262. உலகிலேயே அதிகளவு மீன் பிடிக்கும் நாடு எது?

263. அரேபியாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் இடையே உள்ள கடல் எது?

264. கடலின் ஆழத்தை அளக்க உதவும் கருவி எது?

265. தமிழ்நாட்டில் வாயுமின் நிலையங்கள் எங்குள்ளன?

266. சென்னை தொலைக்காட்சி நிலையம் எப்போது தொடங்கப்பட்டது?

267. தமிழில் முதன்முதலில் தோன்றிய அகராதி எது? அதை தொகுத்தவர் யார்?

268. தமிழின் தொன்மையான நூல் எது?

269. தமிழ் இலக்கிய அகராதியை 18-ஆம் நூற்றாண்டில் தொகுத்தவர்கள் யார்?

270. சிங்கவால் குரங்குகளின் காப்பகம் எது?

271. எம்.விஸ்வேஸ்வரய்யாவால் வடிவமைத்துக் கொடுக்கப்பட்ட பெரிய நீர்த்தேக்கம் எது?

271. எம்.விஸ்வேஸ்வரய்யாவால் வடிவமைத்துக் கொடுக்கப்பட்ட பெரிய நீர்த்தேக்கம் எது?

272. சென்னை மாநகரின் முதல் ஷெரீப் யார்?

273. பைபிளை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

274. தென்னிந்தியாவின் முதல் தமிழ் தினசரி எது?

275. சென்னையின் முதல் மேயர் யார்?

276. தமிழ்நாட்டில் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது?

277. முதன்முதலில் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

278. காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் யார்?

279. மதுரை மீனாட்சி கோவில் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது?

280. தமிழக கடற் கரையின் நீளம் எவ்வளவு?



விடைகள்

261. பிப்ரவரி 4

262. ஜப்பான்

263. செங்கடல்

264. பாதோம் மீட்டர்

265. பேசின்பிரிட்ஜ் (சென்னை), நரிமணம், பிள்ளை பெருமாள் நல்லூர்

266. 15.8.1975

267. சதுரகராதி, தொகுத்தவர் வீரமாமுனிவர்

268. தொல்காப்பியம்

269. ஐரோப்பிய பாதிரியார்கள்

270. நெல்லை மாவட்டம் களக்காடு

271. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் நீர்த்தேக்கம்

272. பி.ரங்கநாத முதலியார்

273. ஆறுமுக பாவலர்

274. சுதேசமித்திரன்

275. சர் முத்தையா செட்டியார்

276. விருதுநகர்

277. ஜி.யு.போப்

278. இரண்டாம் நரசிம்மவர்மன்

279. 16-ம் நூற்றாண்டில்

280. 1076 கி.மீ.



பொது அறிவை வளர்த்துக் கொள்வது எப்படி?

நெல்லை எம்.சண்முகசுந்தரம், வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)

 போட்டித்தேர்வுக்கு தயார் செய்யும் மாணவ-மாணவிகள் தினசரி செய்தித்தாள்களையும், பொது அறிவு தொடர்பான மாத இதழ்களையும் தவறாமல் படித்து வரவேண்டும்.

 தினசரி செய்தித்தாள்களில் உலக அளவிலும், தேசிய அளவிலும் மாநிலம் மற்றும் மண்டல அளவில் நிகழ்கின்ற நடப்பு செய்திகள், நாடு களுக்கு இடையேயான உடன் படிக்கைகள், மாநாடுகள், இந்தியஅளவில் நடைபெறும் நிகழ்ச்சிகள், புதிய கண்டு பிடிப்புகள், புதிய நியமனங்கள், இயற்கைச் சீற்றங்கள், புதிதாக வெளியிடப்படும் புத்தகங்கள், அவற்றின் ஆசிரியர்கள், கலை பண்பாடு பற்றிய செய்திகள், தேசிய, சர்வதேச அளவில் வழங் கப்படும் பரிசுகள், விளையாட்டுச் செய்திகள், பொருளாதாரம் தொடர் பான செய்திகள் வெளியிடப்படும். போட்டித்தேர்வெழுதுவோர் செய்தித்தாள்களைப் படித்து, குறிப் பெடுக்க ஒரு மணி நேரம் செலவிட வேண்டும். செய்தித்தாளை இரண்டுமுறை படிக்க வேண்டும்.

 முதல் முதலாக பொது அறிவு தொடர்பான செய்திகளை மட்டும் வாசிக்க வேண்டும். தேர்வுக்கு எவையெல்லாம் தேவைப்படும் என்பதை தீர்மானித்து அவற்றை மட்டும் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமான தலையங்க பகுதிகளை (Editorial Page) அதை வெட்டி குறிப்பேட்டில் ஒட்டிவைத்துப் படிக்க வேண்டும்.

 இரண்டாவது முறையாக செய்தித் தாள்களைப் படிக்கும் போது, அதில் பிரசுரமாகியுள்ள அரசு மற்றும் தனியார் துறை விளம்பரங்களைப் படிக்க வேண்டும். அரசுத்துறை விளம்பரங்கள் மூலம் நம் நாட்டில் என்னென்ன துறைகள் செயல்பட்டு வருகின்றன என்பதை அறியலாம். தனியார் விளம்பரங்கள் மூலம் என்னென்ன பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன என் பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

 மேற்கண்டவாறு செய்தித்தாள் களைப் படித்து குறிப்பெடுக்கும் வழக்கத்தை மேற்கொண்டு வந்தால் எந்தப் போட்டித்தேர்வையும் சந்திக்க முடியும் என்ற தன்னம் பிக்கை வரும். தேர்வில் இந்த கேள்விகள்தான் வரும் என உறுதியாக கூற முடியாது. இந்த கேள்விகளை எல்லாம் கேட்க வாய்ப்பு உள்ளது என அனுமானத் தில் நாம் தேர்வுக்கு தயார்செய்ய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்