வேலை வேண்டுமா: இந்திய விமான ஆணையத்தில் பணி

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய விமான ஆணையம் (Airport Authority of India) இளநிலை உதவியாளர் (தீயணைப்பு பணி) பதவியில் 147 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப இருக்கிறது.

கல்வித் தகுதி

10-ம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படித்தவர்கள். அல்லது பிளஸ் 2 முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

கல்வித் தகுதியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். பிளஸ் 2-வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு, என்.சி.சி. ‘பி’ சான்றிதழ், ஏவியேஷன் மற்றும் தீயணைப்புப் பணியில் அனுபவம் போன்றவை விரும்பத்தக்க தகுதியாக கொள்ளப்படும்.

தேர்வு முறை

முதலில் எழுத்துத் தேர்வு (தமிழகத்தில் திருச்சி மையம்) நடத்தப்படும். அதில் வெற்றி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக ஓட்டுநர் தேர்வு நடைபெறும். அதன்பிறகு உடற்திறன் தேர்வு, மருத்துவத் தேர்வு ஆகியவை நடத்தப்படும். எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்ப படிவங்களை இந்திய விமான ஆணையத்தின் இணையதளத்தில் (www.airportsindia.org.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்கள், தேர்வுக்கட்டணத்துடன் மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் சென்னையில் உள்ள இந்திய விமான ஆணையத்தின் தென்மண்டல அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை இந்திய விமான ஆணையத்தின் இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

வயது வரம்பு

பொதுப்பிரிவினருக்கு - 30 வயது

ஓ.பி.சி. பிரிவினருக்கு 33 வயது

எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு - 35 வயதாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

உடற்தகுதி

விண்ணப்பதாரர் நல்ல உடல்நலமும், கண் பார்வையும் உடையவராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச உயரம் 167 செ.மீ. அவசியம். மார்பளவு குறைந்தபட்சம் 81 செ.மீ. விரிவடையும் நிலையில் 84 செ.மீ. இருக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

51 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

56 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்