கேள்வி நேரம்: வாய் பிளக்க சில அதிசயங்கள்

By ஆதி வள்ளியப்பன்

1. ஆப்பிரிக்காவின் பழமையான சுதந்திர நாடுகளில் ஒன்று எத்தியோப்பியா. ஆதி மனிதன் எத்தியோப்பியாவில் தோன்றியதாக அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. 30 லட்சம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புடையது இந்நாடு. ‘ஆப்பிரிக்கக் கண்டத்தின் கொம்பு' என்றழைக்கப்படும் பகுதியில் எத்தியோப்பியா அமைந்துள்ளது. இதே பகுதியில் அமைந்துள்ள மற்ற மூன்று நாடுகள் எவை (அவற்றில் ஒன்று பட்டினி-பசிக்காக அறியப்பட்டது)?

2. மத்திய கிழக்கில் கடலுக்கும் பாலைவனத்துக்கும் இடையே உள்ள நாடு ஜோர்டான். இந்த நாட்டின் நிலக்காட்சிகள் அழகும் முரண்பாடுகளும் நிறைந்தவை. இந்த மேற்கு ஆசிய நாட்டின் எல்லையில் உள்ள ஒரு நீர்நிலை உலகிலேயே மிகவும் உப்பு கரிக்கக்கூடியது. இந்த நீர்நிலையில் நீச்சலடிக்காமலேயே மனிதர்கள் மிதக்கலாம். அந்த நீர்நிலையின் பெயர் என்ன?

kelvi 2jpg

3. பரப்பளவில் உலகில் மிகப் பெரிய நாடு ரஷ்யா. பூமியின் நிலப்பரப்பில் எட்டில் ஒரு பங்கை ரஷ்யா கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், 11 வித்தியாசமான நேர மண்டலங்களைக் கொண்ட ஒரு நாடும்கூட. இந்த ஆச்சரியங்கள் மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட ரயில் பாதை 9,000 கி.மீ.க்கு இந்த நாட்டில் உள்ளது. அதன் பெயர் என்ன?

4. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்று, அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்டது பெல்ஜியம். இடைக்கால நகரங்கள், சாக்லேட், மறுமலர்ச்சி காலக் கட்டிடங்களுக்காகப் புகழ்பெற்ற நாடு. இந்த நாட்டின் தலைநகர் புருஸ்ஸெல்ஸ், உலகின் இரண்டு முக்கிய அமைப்புகளுக்கான தலைமையகங்களைக் கொண்டுள்ளது. அந்த அமைப்புகளின் பெயர் என்ன?

7. மலைகள், பாலைவனங்கள், காடுகள் எனப் பல்வேறுபட்ட நிலஅமைப்புகளைக் கொண்ட நாடு மெக்சிகோ. வட அமெரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நாட்டைச் சேர்ந்த பல்வேறு ஓவியர்கள் உலகப் புகழ் பெற்றுள்ளனர். இந்த நாட்டைச் சேர்ந்த 20-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான பெண்ணிய ஓவியர், கற்பனாவாத சுய உருவ ஓவியங்களை வரைவதற்காகப் புகழ்பெற்றவர். அவருடைய பெயர் என்ன?

6. வட அமெரிக்கக் கண்டத்தின் மிகப் பெரிய நாடு அமெரிக்கா அல்ல, கனடா. பசிஃபிக், அட்லாண்டின் என இரண்டு கடல்களை இரண்டு பக்கங்களிலும் கொண்டது. போர்களில் அதிகம் தலையிடாத, முற்போக்கான, வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் நாடுகளில் ஒன்று. இந்த நாட்டுக்கு பருவ காலத்துக்கு ஏற்ப இரண்டு தேசிய விளையாட்டுகள் உண்டு. ஒரு தேசிய விளையாட்டு நமது தேசிய விளையாட்டுக்கு மிகவும் நெருக்கமானது. அது என்ன விளையாட்டு?

5. தென்னமெரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளில் இரண்டாவது சின்ன நாடு உருகுவே. பச்சைப் பசேலென்ற நிலக்காட்சிகள், கடற்கரைகள் நிறைந்த நாடு. ஸ்பெயினின் ஆதிக்கத்தின் கீழ் நீண்ட காலத்துக்கு இருந்த இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஸ்பானிஷ். மக்கள்தொகையில் 99 சதவீதத்தினர் ஸ்பானிஷ் பேசுவார்கள். இந்தப் பின்னணியில் அந்த நாட்டின் தேசிய கீதமான ‘ஓரியன்டலஸ்' ஸ்பானிஷ் மொழியில் இருப்பதில் வியப்பேதும் இல்லை. இந்தத் தேசிய கீதத்தின் தனித்தன்மை என்ன?

8. 1965-ல் அண்டை நாடான மலேசியாவுடன் ஏற்பட்ட மோதலால் தனி நாடாகப் பிறந்தது, ஒற்றை நகரைக் கொண்ட தீவு நாடு சிங்கப்பூர். வரைபடத்தில் மிகவும் சிறியதாக ஒற்றைச் சிவப்புப் புள்ளியாகத் தென்படுவதால், இதற்கு ‘சிவப்புப் புள்ளி நாடு' என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு. ஆசியாவில் வாழத் தகுதி படைத்த சிறந்த நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் திகழ்கிறது. சுவாரசியமூட்டும் வகையில் அமெரிக்காவில் சிங்கப்பூர் என்ற பெயரில் ஒரு பேய் நகரம் இருக்கிறது. இது எந்த அமெரிக்க மாகாணத்தில் அமைந்திருக்கிறது?

9. உலகின் மாபெரும் கடலான பசிஃபிக் பெருங்கடலில் சில குட்டித் தீவு நாடுகள் உண்டு. இவற்றில் ஒன்று கிரிபாட்டி. செயலற்ற எரிமலை, பவழத் திட்டுத் தீவுகளால் உருவானது இந்த நாடு. கடந்த நூற்றாண்டைப் புரட்டிப்போட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களின் சில எச்சங்கள் இந்தத் தீவுகளில் உள்ளன. அவை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவையும்கூட. அவை என்ன?

10. ஆப்பிரிக்காவில் இயற்கை வளம் நிறைந்த நாடு அங்கோலா. கச்சா எண்ணெய், வைரம், வேளாண் நிலங்கள், காட்டுயிர்கள் நிறைந்தது. அங்கோலாவில் உள்ள ஒரு நகரம் ‘ஆப்பிரிக்காவின் பாரிஸ்' என்று அழைக்கப்படுகிறது. அந்த நகரின் பண்பாடும் வசதிகளுமே இந்தப் பட்டப் பெயர் உருவானதற்குக் காரணம். அந்த நகரம் எது?

விடைகள்:

1. மாலியா

2. சாக்கடல் (Dead Sea), உப்புத் தண்ணீரின் அடர்த்தி காரணமாக மனிதர்கள் மிதக்கிறார்கள்

3. டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே

4. ஐரோப்பிய யூனியன்,

நேட்டோ (NATO)

5. நீண்ட நேரம் பாடப்படும்

தேசிய கீதம் (6 நிமிடங்கள்)

6. அந்நாட்டின் குளிர்காலத்

தேசிய விளையாட்டு ஐஸ் ஹாக்கி.

7. ஃப்ரீடா காலோ (Frida kahlo).

8. மிஷிகன்

9. இரண்டாம் உலகப் போர் எச்சங்கள்.

10. லுவாண்டா (Luanda), அங்கோலாவின் தலைநகரம்


(நிறைவடைந்தது)
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

4 hours ago

மேலும்