ஆங்கில​ம் அறிவோமே 269: சொன்னபடி கேளு, மக்கர் பண்ணாதே!

By ஜி.எஸ்.எஸ்

கேட்டாரே ஒரு கேள்வி

Arm-in-arm என்பதும் hand-in-hand என்பதும் ஒரே பொருள் கொடுப்பவையா?

Arm என்பது கை.   Arm-in-arm, hand-in-hand ஆகிய இரண்டுமே கைகளைக் கோத்துக்கொள்வதைக் குறிக்கின்றன.  அதாவது அன்பின் வெளிப்பாடு.  மிக நெருக்கமாக இருப்பதையும் (அதாவது closely associated) hand-in-hand என்பார்கள்.  Confidence and experience usually go hand-in-hand.

சூரியக் குடும்பத்திலுள்ள கோள்களின் பெயர்களை வரிசைப்படி (அதாவது சூரியனுக்கு மிக அருகிலுள்ள கோளிலிருந்து வெகு தொலைவிலுள்ள கோள் எனும் வகையில்) நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய  ஒரு வாக்கியத்தைப் படிக்க நேரிட்டது.  அது மாணவர்களுக்குப் பயனுள்ளதாகவும் பிறருக்குச் சுவை அளிப்பதாகவும் இருக்க  வாய்ப்பு உண்டு.

“My Very Educated Mother Just Served Us Noodles.”

இதில் ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தும் ஒவ்வொரு கோளின் முதல் எழுத்தைக் குறிக்கிறது.

My - Mercury, Very - Venus, Educated - Earth, Mother - Mars, Just - Jupiter, Served - Saturn, Us - Uranus, Noodles - Neptune

 “Monkey, Chimpanzee, Ape ஆகிய அனைத்தும் குரங்கைக் குறிக்கும் சொற்கள்தாமே?’’

ஆமாம்.... ஆனால் இல்லை.  Monkey என்பது வால் உள்ள குரங்கு.  குரங்கு போலவே தோற்றமளிக்கும் கொரில்லா, சிம்பன்சி போன்றவற்றுக்கு வால் கிடையாது.  இந்த வாலில்லாக் குரங்குகளை apes என்பார்கள்.

Jarring noise என்றால் என்ன என்று வாசகர் ஒருவர் கேட்டிருக்கிறார்.

Jarring என்றால் அதிர்ச்சியையோ அதிருப்தியையோ ஏற்படுத்துகிற ஒன்று.  சாலைவிபத்தை நேரில் பார்த்தால் அது ஒரு jarring sight ஆக இருக்கும்.  ஒரு பொருள் எதிர்பாராமல் கீழே விழுந்து பெரும் ஒலியை எழுப்பினால் அது jarring sound.   Jarring என்பதை not pleasant என்று கொள்ளலாம்.

“ஒரு தம்பதிக்கு ஒரே குழந்தைதான் என்றால், அந்தக் குழந்தையை எப்படிக் குறிப்பிடுவது?  He is only a child என்றால் அது தவறாகப்படுகிறதே!”

நண்பரே, அந்தக் குழந்தை ஏதோ தவறு செய்ததற்காக அவனை யாராவது கண்டிக்கும்போது நீங்கள் “He is only a child” எனலாம்.  ஆனால், நீங்கள் கூறும் அர்த்தம் வெளிப்பட வேண்டுமென்றால் “He is an only child” எனலாம்.

“Can you என்று தொடங்கும் வாக்கியத்தை ஒருவர் கூறும்போது அது நமது அனுமதியைக் கோரும் வாக்கியம் மட்டுமேவா?”

ஆமாம்.  ஆனால், அது சொல்லப்படும் தொனி, அதை யார் கூறுகிறார்கள் என்பதைப் பொறுத்து அது உத்தரவையோ எரிச்சலையோ வெளிப்படுத்தலாம். நீங்கள் யார் காலையோ மிதித்துக்கொண்டிருந்தால் “Can you take off your leg?” என்று எரிச்சலுடன் ஒருவர் கூறக்கூடும்.

உங்கள் மேலதிகாரி “Can we talk? என்றோ Can you stop by my office?” என்றோ கேட்டால் அவை உண்மையில் கட்டளைகள்தாம்.  “Can you என்று தொடங்குவதால் அவற்றை நீங்கள் அனுமதியாக எண்ணிக்கொண்டு “No’’ என்றோ “No please” என்றோ கூறிவிட முடியாது.

போட்டியில் கேட்டுவிட்டால்

__________ of the two men, who travelled with me, would have committed this crime.

(a) None, (b) Either, (c) Both, (d) Neither, (e) All

None, both, all ஆகிய சொற்கள் கோடிட்ட இடத்தில் பொருந்தவில்லை.  ஏனென்றால், கோடிட்ட இடத்தைத் தொடர்ந்து of எனும் சொல் இடம் பெறுகிறது.  தவிர இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் குறித்துக் கூறும்போதுதான் none என்பது வரும்.

Either, neither ஆகிய இரு சொற்களும் இங்கே பொருந்துகின்றன.  என்றாலும், வாக்கியத்தின் பொருளைக் கவனிக்கும்போது “என்னோடு பயணம் செய்த இருவரில் ஒருவர்தான் இந்தக் குற்றத்தைச் செய்திருக்க முடியும்’’ என்பது மேலும் இயல்பானதாக இருக்கிறது. எனவே either என்பது அதிகப் பொருத்தமாகப்படுகிறது.

எனவே,  Either of the two men, who travelled with me, would have committed this crime என்பதுதான் சரியான வாக்கியம்.

சிப்ஸ்

# A man of loose morals என்றால்?

ஒழுக்கம் கெட்டவன்

# Now-and-then என்றால் அடிக்கடியா, அரிதாகவா?

அரிதாக.  Now and again என்றாலும் இதே பொருள்தான்.

# My family exercised our rights. சரியா?

My family exercised its rights அல்லது our family exercised our rights என்பதுதான் சரி.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்