வேலை வேண்டுமா? - மத்திய அரசுக் காப்பீட்டு நிறுவனப் பணி

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

மத்திய அரசின் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி (Administrative Officer- Scale-I) பதவியில் 245 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.

தேவையான தகுதி

இந்தப் பதவிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் எனில் 55 சதவீத மதிப்பெண் போதும்.

வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்படும்.

தேர்வு முறை

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். எழுத்துத் தேர்வில் முதல்நிலை, 2-ம் நிலை என இரு தேர்வுகள் உண்டு. இரண்டு தேர்வுகளுமே ஆன்லைன் வழியில்தான் நடத்தப்படும்.

முதல்நிலைத் தேர்வில், பொது ஆங்கிலம், ரீசனிங், அடிப்படைக் கணிதம் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். 100 மதிப்பெண். தேர்வு 1 மணி நேரம். இதில் தேர்ச்சி பெறுவோர் 'ஒரு காலியிடத்துக்கு 15 பேர்' என்ற விகிதாச்சார அடிப்படையில் 2-வது நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். அதில் அப்ஜெக்டிவ் வகை, விரிவாக விடையளிக்கும் தேர்வு (Descriptive Type) ஆகியவை இருக்கும்.

அப்ஜெக்டிவ் வடிவிலான தேர்வில் ரீசனிங், பொது ஆங்கிலம், பொது அறிவு, அடிப்படைக் கணிதம் ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 200. தேர்வு 2 மணி நேரம். அதைத் தொடர்ந்து, விரிவாக விடையளிக்கும் தேர்வு நடைபெறும். இதில், கடிதம் எழுதுதல், கட்டுரை எழுதுதல் என இரு பகுதிகள் இருக்கும். தேர்வு அரைமணி நேரம். மதிப்பெண் 30.

2-வது நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இறுதியாகத் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்.

தகுதியுடைய பட்டதாரிகள் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் (www.newindia.co.in) விண்ணப்பிக்க வேண்டும்.

நேரடியாக நிர்வாக அதிகாரி (ஸ்கேல்-1) பணியில் சேருபவர்கள் உதவி நிர்வாக மேலாளர், உதவி மேலாளர், துணை மேலாளர், மேலாளர், கோட்ட மேலாளர், பொது மேலாளர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எனப் பதவி  உயர்வு பெறலாம்.

முக்கிய தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26 டிசம்பர்

முதல்நிலைத் தேர்வு: 30 ஜனவரி 2019

2-வது நிலைத் தேர்வு: 2 மார்ச் 2019

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

11 mins ago

இந்தியா

19 mins ago

சுற்றுச்சூழல்

29 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

24 mins ago

விளையாட்டு

45 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்