வேலை வேண்டுமா? - பொறியியல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணி

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

தமிழக அரசின் வேலைவாய்ப்புப் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) முதல்வர், உதவி இயக்குநர் பணியில் 9 காலியிடங்களும், தொழில்துறையில் உதவி இன்ஜினீயர் பதவியில் 32 காலியிடங்களும் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

தேவையான தகுதி

முதல்வர், உதவி இயக்குநர் பதவி: ஏதேனும் ஒரு பொறியியல் பாடப் பிரிவில் பொறியியல் பட்டம்.

பணி அனுபவம்: தொழிற்சாலை அல்லது பணிமனையில் 3 ஆண்டுகள்.

வயது வரம்பு: 24 முதல் 30 வரை. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி.) வயது வரம்பு கிடையாது.

உதவி இன்ஜினீயர் பதவி: சிவில் இன்ஜினீயரிங், ஆர்க்கிடெக்சர் பாடங்கள் நீங்கலாக இதர பொறியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம்.

பணி அனுபவம்: தொழிற்சாலை அல்லது பணிமனையில் குறைந்தபட்சம் 6 மாதம்.

வயது வரம்பு: 18 முதல் 35 வயதுவரை. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது

தேர்வு முறை

மேற்கண்ட இரு பதவிகளுக்கும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்வுசெய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வில் 2 தாள்கள் இருக்கும். முதல் தாள் பொறியியல் தொடர்பானது. 2-வது தாள் பொது அறிவு சம்பந்தப்பட்டது. தகுதியுள்ள பொறியியல் பட்டதாரிகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தைப் (www.tnpsc.gov.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், தேர்வு மையம், தேர்வுக்கான பாடத்திட்டம் உள்ளிட்ட இதர விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24 டிசம்பர் 2018

எழுத்துத் தேர்வு: 2 மார்ச் 2019.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

13 mins ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

24 mins ago

வாழ்வியல்

15 mins ago

இந்தியா

29 mins ago

தமிழகம்

50 mins ago

சினிமா

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்