வேலை வேண்டுமா? - இந்தியன் வங்கியில் அதிகாரிப் பணி

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

இந்தியன் வங்கியில் அதிகாரிகள் பதவிக்கான (Probationary Officer) காலிப் பணியிடங்களை நிரப்பும் அறிவிக்கையை அந்த வங்கி வெளியிட்டுள்ளது. ஆர்வமும் உரிய தகுதியும் கொண்டவர்கள் ஆகஸ்ட் 27-ம் தேதிவரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்தக் காலிப் பணியிடங்கள்: 417

வயது: குறைந்தபட்ச வயது 20, உச்சபட்ச வயது 30. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் சலுகை உண்டு.

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி. / எஸ்.டி. / மாற்றுத் திறனாளி ஆகியோருக்கு ரூ. 100. பிற பிரிவினருக்கு ரூ. 600. கட்டணத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த முடியும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்திய நகரங்கள் பலவற்றில் நடைபெறும் இந்த ஆன்லைன் தேர்வு சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட தமிழக நகரங்களிலும் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள் www.indianbank.in  என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

முக்கிய நாள்கள்

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 27.08.2018

ஆன்லைன் முதல்நிலைத் தேர்வு நாள்: 06.10.2018

ஆன்லைன் முதன்மைத் தேர்வு நாள்: 04.11.2018

கூடுதல் விவரங்களுக்கு: https://goo.gl/X9MuuR

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

சினிமா

14 mins ago

இந்தியா

54 mins ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

20 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்