பிளஸ் 2-வுக்குப் பிறகு: உயிர்ப்பான உயர் கல்வி

By எஸ்.எஸ்.லெனின்

யர் கல்வியில் இயற்பியல், வேதியியல் போன்ற பாரம்பரியமான அறிவியல் படிப்புகளின் வரிசையில் தாவரவியல், விலங்கியல் குறித்தான இளம் அறிவியல் பட்டப் படிப்புகளும் அடங்கும். பிளஸ் 2-வில் உயிரியல், அறிவியல், பயின்ற மாணவர்கள் அதற்கேற்ற மாதிரி இளம் அறிவியல் பட்டப் படிப்புகளில் சேரத் தகுதி பெறுகிறார்கள்.

தாவரவியல்

உயிர் மண்டலத்தில் நம்மைச் சூழ்ந்திருக்கும் பூஞ்சைகள், பாசிகள், தாவரங்கள் ஆகியவற்றைப்பற்றித் தாவரவியலில் படிக்கலாம். தாவரத்தின் இயற்பியல், வேதியியல் பண்புகள், வளர்சிதை மாற்றம், வளர்ச்சி, பரவல், கட்டமைப்பு, பாதிக்கும் நோய்க் கூறுகள் எனப் பல்வேறு அம்சங்களைச் செயல்முறை அறிவுடன் இப்படிப்பு போதிக்கிறது. சிறப்புப் பாடங்களாக சூழலியல், உயிர் இயற்பியல், உயிர் வேதியியல், உயிரணுவியல், மரபியல் உள்ளிட்ட பல்வேறு வளரும் துறைகளைப் பற்றியும் படிக்கலாம். தொடர்ந்து முதுநிலை மேற்படிப்பு முதல் ஆராய்ச்சி நிலைவரை பயின்றால், தனித்துவமான வேலைவாய்ப்புகள் நிச்சயமாகும்.

விலங்கியல்

விலங்கியல், இதர உயிரியல் படிப்புகளில் சேர்ந்து ஆராய்ச்சி நிலைவரை தங்களை உயர்த்திக்கொள்வதன் மூலம், மருத்துவத் துறைக்கு ஈடான துறைசார் ஆழ்ந்த அறிவையும் பணி திருப்தியையும் அதிகச் செலவின்றிப் பெறலாம். விலங்கியல் மாணவர்கள் முதுநிலைப் படிப்புகளில் பல்லுயிர்ப் பெருக்கம், உயிர்த் தகவலியல், சூழலியல் கண்காணிப்பு, காட்டுயிர்ப் பாதுகாப்பு, சூழலியல் மேலாண்மை உள்ளிட்ட வளரும் துறைகளிலும் தங்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.

இளம் அறிவியல் நிலையில் விலங்கியல் படித்தவர்கள், மேற்கொண்டு முதுநிலைப் பட்டம் அல்லது பட்டயப் படிப்பாக விலங்கியல், அப்ளைடு ஜூவாலஜி, லைஃப் சயின்ஸ் போன்றவற்றைப் பயிலலாம். மேலும் பயோடெக்னாலஜி, ஃபார்மா, டெய்ரி, கிளினிக்கல் ரிசர்ச் உள்ளிட்ட பிரிவுகளில் எம்.பி.ஏ. பயில்வதன் முதல் அத்துறையின் மேலாண்மை மற்றும் நிர்வாகத் துறைகளின் உயர் பணியிடங்களைக் குறிவைக்கலாம்.

பயோ டெக்னாலஜி

உயிரியலும் தொழில்நுட்பவியலும் இணைந்த இளம் அறிவியல் பட்டப் படிப்பே உயிர் தொழில்நுட்பவியல். மருத்துவம், தொழில்நுட்பம், பொறியியல், உயிர்நுட்பம் எனப் பல சுவாரசியமான துறைகளின் கலவை இது. உயிரிகளின் செல், மூலக்கூறு அளவிலான ஆராய்ச்சி, பரிசோதனைகள் மூலம் நோய்களுக்கான மருந்துப் பொருட்கள், நோய் எதிர்ப்புப் பொருட்கள், உணவுப் பொருட்கள், விவசாய உற்பத்திக்கான நுட்பங்கள் ஆகியவை மூலம் மனிதனின் வாழ்க்கைத் தரம் உயர இத்துறை சார்ந்த படிப்பு உதவுகிறது.

இதன் முதுநிலைப் படிப்பாக விவசாயம், மருத்துவம், கால்நடை சார்ந்த பல்வேறு பயோடெக்னாலஜி பிரிவுகளில் சேர்ந்து பயிலலாம். எம்.எஸ்சி. பயோடெக்னாலஜியை ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பாகவும் சில கல்லூரிகள் வழங்குகின்றன. பயோடெக்னாலஜியை பி.எஸ்.சி., என்ற மூன்று வருட இளம் அறிவியல் படிப்பைப் போன்றே, பி.டெக்., என்ற நான்கு வருடப் பொறியியல் படிப்பாகவும் படிக்கலாம்.

மைக்ரோபயாலஜி

நம்மைச் சூழ்ந்திருக்கும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் குறித்தும் அவை நமது ஆரோக்கியம், உணவு, விவசாயம் உள்ளிட்டவற்றில் ஏற்படுத்தும் நன்மை தீமைகள் குறித்தும் படிப்பதே மைக்ரோபயாலஜி. மருத்துவ ஆராய்ச்சி, இயற்கையாகவும் செயற்கையாகவும் தயாரிக்கப்படும் உணவு ரகங்கள், அழகு-ஆரோக்கியத்துக்கான பொருட்கள், விவசாயப் பொருட்கள் உள்ளிட்டவற்றில் மைக்ரோபயாலஜி துறையின் பங்கு அதிகம். கூடுதலாக முதுநிலைப் பட்டம் அல்லது பட்டயம் படித்தோ, ஆராய்ச்சி மேற்படிப்பு மூலமாகவோ பாக்டீரியாலஜிஸ்ட், வைராலஜிஸ்ட், பயோகெமிஸ்ட், செல் பயாலஜிஸ்ட் போன்ற பணிகளைப் பெறலாம். மருத்துவத் துறையில் மரபியல் பொறியியல் மூலம் மரபு நோய்கள், அச்சுறுத்தும் புதிய தொற்றுநோய்களுக்கான மருந்துப் பொருள் தயாரிப்பிலும், தடுப்பூசிகள் தயாரிப்பிலும் வியத்தகு வளர்ச்சியை மைக்ரோபயாலஜி கொண்டுள்ளது.

பயோடெக்னாலஜிக்கு இணையான இளம் அறிவியல் படிப்பாக பி.எஸ்சி., உயிரியல் பட்டப்படிப்பைப் பல கல்லூரிகள் வழங்குகின்றன. ஆனபோதும் பாடத்திட்டத்தில் இந்த இரண்டுக்கும் இடையில் அடிப்படையான சில வேறுபாடுகள் உண்டு. பி.எஸ்சி. உயிரியல் அறிவியல் பாடமாகும். பயோடெக்னாலஜி தொழில்நுட்பப் பாடமாகும். வகைப்பாட்டியல், வாழும் உயிரினங்கள், அவற்றின் வளர்ச்சி, மரபியல், செயலாக்கம், பயன்பாடுகள் குறித்து உயிரியல் படிப்பு கற்றுத் தருகிறது. இளநிலையில் தாவரவியல், உயிரியல், விலங்கியல் பாடங்களைப் பயின்று முதுநிலையில் பயோடெக்னாலஜி, மைக்ரோபயாலஜி போன்றவற்றைப் பயில்வதும் பலரது தேர்வாக இருக்கிறது.

ஆசிரியர் பணி முதல் ஐ.எஃப்.எஸ். எனப்படும் இந்திய வனப் பணிவரை பலவிதமான வேலைவாய்ப்புகளுக்கு இந்தப் பட்டப் படிப்புகள் உதவும்.

வேலை கிடைக்குமா?

தாவரவியலைப் பயின்றவர்களுக்கு வேதியியல் தொழிற்கூடங்கள், எண்ணெய் வயல்கள், தேசியப் பூங்காக்கள், பள்ளி-கல்லூரி- பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், தாவரவியல் ஆய்வுக் கூடங்கள், உயிர் நுட்பவியல் ஆராய்ச்சி எனப் பல துறைகள் சார்ந்த பணிகள் காத்திருக்கின்றன.

வேலை கிடைக்குமா?

விலங்கியல் பட்டப்படிப்பை முடித்தவர்கள் காட்டுயிர் ஆராய்ச்சியாளர், சூழலியல் அலுவலர், ஆய்வக உதவியாளர் போன்ற பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்