கேள்வி நேரம் 30: புத்தகங்கள் தமிழுக்கு வந்தது எப்படி?

By ஆதி வள்ளியப்பன்

1.

முதல் தமிழ் புத்தகம் 1554 பிப்ரவரி 11-ம் தேதி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் வெளியானது. அது, தமிழிலும் போர்த்துக்கீசிய மொழியிலும் அமைந்த சிற்றேடு (திருமறை). சரி, இந்தப் புத்தகத்தில் தமிழ்ச் சொற்கள் எந்த வரிவடிவத்தில் (லிபி) அச்சிடப்பட்டிருந்தன?

2. 1547-ல் தமிழகம் வந்த போர்த்துக்கீசிய சேசு சபைத் துறவி ஹென்ரிக் ஹென்ரிக்ஸ் தமிழ் வரிவடிவில் முதல் நூலை எழுதினார். பெரோ லூயிஸ் என்கிற மற்றொரு தமிழ் யேசு சபைத் துறவி, யோவான் ஃபாரியா ஆகியோரின் உதவியுடன் இந்த நூலுக்கான தமிழ் எழுத்துருக்களை கோவாவில் யோவான் கொன்சாலஸ் உருவாக்கினார். இவற்றைக் கொண்டு 1577-ல் தமிழ் வரிவடிவத்தில் மட்டுமல்லாமல், இந்திய வரிவடிவத்தில் வெளியான அந்த முதல் நூலின் பெயர் என்ன?

3. பதினேழாவது நூற்றாண்டில் ரோமில் உருவாக்கப்பட்ட அச்சுருக்கள் மூலம் கேரளத்தின் அம்பலக்காட்டில் தமிழ் நூல்கள் அச்சிடப்பட்டன. இந்த அச்சகம் மூலம் தமிழ் - மற்றொரு மொழி அகராதி 1679-ம் ஆண்டில் வெளியானது. அந்த அகராதியின் பெயர் என்ன?

4. ‘தத்துவ போதக சுவாமிகள்’ என்று அழைக்கப்படும் ராபர்ட் தெ நோபிலி ரோமைச் சேர்ந்தவர். யேசு சபைத் துறவியான இவர் மதுரையில் பணியாற்றினார். கிறிஸ்தவ மத நூல் ஒன்றை எழுதியதன் மூலம் தமிழில் நேரடியாக எழுதிய முதல் நூலாசிரியர் ஆனார். தமிழில் 40 உரைநடை நூல்களை எழுதியுள்ளார். தமிழ் மொழி சார்ந்து இவருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்புப் பட்டம் என்ன?

5. தமிழ் அச்சு வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கு மேல் நூல்கள் அச்சடிக்கப்படாமல் இருந்தன. இந்தத் தேக்க நிலையை முடிவுக்குக் கொண்டுவந்தவர் பர்த்தலோமேயு சீகன்பால்கு. இவருடைய முயற்சியால் 1712-ம் ஆண்டில் தரங்கம்பாடியில் அச்சகம் நிறுவப்பட்டது. இந்த அச்சகத்தில் ‘லத்தீன்-கொடுந்தமிழ் இலக்கண நூல்’ அச்சடிக்கப்பட்டது. இந்த நூலை எழுதிய தமிழ் அறிஞர் யார்?

6. யேசு சபைத் துறவியான கான்ஸ்தந்தின் பெஸ்கி எனப்பட்ட வீரமாமுனிவர் தமிழ் அச்சு, இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர். ‘தமிழ் - இலத்தீன்’, ‘இலத்தீன் - தமிழ் - போர்த்துகீசு’, ‘தமிழ் - பிரெஞ்சு’, புகழ்பெற்ற தமிழ்-தமிழ் நிகண்டான ‘சதுரகராதி’என பல அகராதிகளை முதலில் தொகுத்த பெருமைக்கு உரியவர் அவர். அவர் எழுதிய ‘பரமார்த்த குருவின் கதை’ அல்லது ‘Guru Simpleton’ தமிழில் முதன்முதலாக அச்சான நாட்டுப்புற கதைத் தொகுப்பு. 1822-ல் லண்டனில் அச்சிடப்பட்டு வெளியான இந்த நூலுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. அது என்ன?

7. சென்னை மாவட்ட ஆட்சியரான பிரான்சிஸ் வைடு எல்லிஸ். தமிழ் ஆராய்ச்சிக்காக 1812-ல் புனித ஜார்ஜ் கல்லூரியை சென்னையில் நிறுவினார். அங்கு ஓர் அச்சகமும் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னக மொழிகளில் இந்த அச்சகம் நூல்களை வெளியிட்டது. இந்த அச்சகத்துக்கும் எல்லிசுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் வெளியான நூல் எது?

8. கிழக்கிந்திய கம்பெனி தமிழ்நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகு கிறிஸ்தவ சமய போதகர்களைத் தவிர வேறு யாரும் அச்சகங்களை வைத்திருக்கவோ நூல் வெளியிடவோ அனுமதிக்கவில்லை. இதற்காக 1835 வரை தடை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை தளர்த்தப்பட எல்லிஸ் ஒரு காரணமாக இருந்தவர். இந்தத் தடையில் சில தளர்வுகளைக் கொண்டுவந்த அந்தக் கால சென்னை மாகாணத்தின் ஆளுநர் யார்?

9. இலங்கையிலும் இந்தியாவிலும் யாழ்ப்பாணம், சிதம்பரம், சென்னை ஆகிய ஊர்களில் தமிழ் மொழி, சைவக் கோட்பாடுகளுக்காக அச்சகங்களை நிறுவியவர் ஆறுமுக நாவலர். சூடாமணி நிகண்டு (1849), உரையுடன் நன்னூல் (1851), நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, மாணிக்கவாசகரின் திருவாசகம், பரிமேலழகர் உரையுடன் திருக்குறள் (1861) என பழந்தமிழ் இலக்கியங்களை பதிப்பித்த பெருமைக்கு உரியவர் அவர். அச்சிடல், தமிழ் எழுத்து மொழி வளர்ச்சியில் ஆறுமுக நாவலர் கொண்டுவந்த முக்கிய மாற்றம் என்ன?

10. சென்னையில் 1952-ல் ‘சென்னை அச்சகத்தார், லிதோகிராஃபர் சங்கம்’ தொடங்கப்பட்டது. தேசிய அளவில் இந்தச் சங்கத்தின் தனிச்சிறப்பு என்ன?

விடைகள்

1. லத்தீன்

2. தம்பிரான் வணக்கம்

3. ‘தமிழ்- போர்த்துகீசிய அகரமுதலி’

4. தமிழ் உரைநடையின் தந்தை

5. வீரமாமுனிவர்

6. இந்த நூல் லத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டது.

7. எல்லிசின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு

8. தாமஸ் மன்றோ

9. நிறுத்தற்குறிகளை முதன்முதலாகப் பயன்படுத்தியது

10. நாட்டில் தொடங்கப்பட்ட முதல் அச்சக சங்கம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்