தொழில் தொடங்கலாம் வாங்க 50: அதிக ரிஸ்க், அதிக வளர்ச்சி!

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

பெட்டிக்கடை நடத்தலாம் என்று என் மனைவி சொல்கிறார். மாறிவரும் தொழில்நுட்ப உலகில் இது எத்தனை காலம் நிலைக்கும்? பெட்டிக்கடைக்கு வருங்காலம் உண்டா?

எல்லாக் காலங்களிலும் சிறிய பெட்டிக்கடைகளுக்குச் சந்தை உள்ளது. எங்கே கடை அமைந்திருக்கிறது, என்ன விற்கிறீர்கள் என்பதில்தான் மாறுதல்கள் வரும். எவ்வளவு தொழில்நுட்பம் வந்தாலும் சாலையோரச் சின்னக் கடைக்காரர்களுக்கான தேவை என்றும் இருக்கும். இருபது வருடங்களுக்குப் பின் உங்களுக்குப் பதில் ஒரு ரோபோ உட்கார்ந்து விற்றுக்கொண்டிருக்கலாம்!

“சொந்தமாகத் தொழில் செய்வது பெரிய ரிஸ்க். கடைசி வரை வருமானத்துக்கு உத்தரவாதம் கிடையாது!” என்கிறார் என்னுடைய ஆசிரியர். உங்கள் பதில் என்ன?

- மணி, தஞ்சாவூர்.

அவர் சொல்வது உண்மைதான். தொழில் என்றாலே ரிஸ்க்தான். இன்னொன்றையும் சேர்த்துக்கொள்கிறேன், இன்றைய சூழ்நிலையில் வேலை பார்த்தாலும் பணி நிரந்தரம் கிடையாது. ‘ஒரே வேலையில் ஆயுட்காலம் முழுவதும்’ என்ற நிலை வேகமாக மாறுகிறது. வேலையா தொழிலா எது அதிக ரிஸ்க் என்றால் சந்தேகமில்லாமல் தொழில்தான் அதிக ரிஸ்க் ! ஆனால், அதிகம் ரிஸ்க் இருந்தால்தான் அதிக வளர்ச்சியும் காணக்கிடைக்கும்!

நான் இல்லத்தரசி. பெரிதாக முதலீடு செய்யவோ குடும்பப் பொறுப்புகளைக் குறைத்துக்கொள்ளவோ முடியாத நிலையில் இருக்கிறேன். நன்றாகச் சமைப்பேன். என்னுடன் சேர்ந்து தொழில் தொடங்க இரண்டு தோழிகள் தயாராக இருக்கிறார்கள். உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள் என்ன செய்யலாம்?

- கவிதா, புதுச்சேரி.

சில மணி நேரம் உழைக்க முடியும், நல்ல தோழிகள் உண்டு, சமைக்கும் திறன் உள்ளது. இதெல்லாம் உங்கள் பலங்கள். தொழில் செய்ய முதலீடு பணமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. கடன் கிடைக்கலாம். சுய உதவி குழுக்கள் போல அமைத்தால் நல்ல ஆலோசனையும் நிதியுதவியும் கிடைக்கலாம். ஆனால், இவை அனைத்தையும்விட நீங்கள் தீர்மானிக்க வேண்டியவை: என்ன தொழில் செய்ய வேண்டும், அதை எந்த அளவில் தொழில் செய்ய வேண்டும். இதை நீங்கள்தான் செய்ய முடியும். அதற்கான தகவல்கள் நிறைய சேகரிக்கலாம்.

மெஸ் வைப்பதில் ஆரம்பித்து உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பதுவரை ஆயிரக்கணக்கான தொழில்கள் உள்ளன. உணவு சம்பந்தப்பட்ட தொழிலுக்கு என்றுமே பெரிய வாய்ப்புகள் உண்டு. உணவு சம்பந்தப்பட்ட கண்காட்சிகள் போய்வாருங்கள். இதே துறையில் உள்ளவர்களிடம் பேசுங்கள். கிராமத்துப் பெண்கள் ஆரம்பித்த ‘லிஜ்ஜட் பப்பட்’ இன்று கோடிக்கணக்கில் வியாபாரமாகிறது. கூட்டுறவு அமைப்பு மிகச் சிறந்தது. சுய உதவிக் குழுக்கள் நடத்துபவர்களிடம் பேசுங்கள். வலைத்தளங்களில் ஆராயுங்கள். உங்கள் எண்ணம் புதிதாக இருந்து லாபமாக நடத்த முடியும் என்று நம்பினால் சில முதலீட்டாளர்கள் உங்களை நாடி வரக்கூடும்.

“புதிய ஆலோசனை கேட்டால் வெறும் அறிவுரைதானா” என்கிறீர்களா? வயதானவர்களுக்கு அவர்கள் தேவைக்கேற்ப சிறப்பு உணவுகளைச் சமைத்து, வீடு தேடிக் கொடுக்கும் சேவை வருங்காலத்தில் நிறைய தேவைப்படும். தனியாக வாழும் தம்பதியினருக்கு இரவு உணவுக்கு இட்லி, சப்பாத்தி, இடியாப்பம் போன்றவற்றை வீடு தேடிச் சென்று சுடச்சுடக் கொடுத்தால் உங்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்காமலா போவார்கள்? சர்க்கரை போடாத காபியும் பாலும் கூட எடுத்துச்செல்லுங்கள். இரவு சாப்பாட்டுக் கடையை மூடி விட்டு உங்களுக்குத் தான் போன் செய்வார்கள். இந்த ஐடியாவை உங்கள் தோழிகளிடம் பேசிப் பாருங்களேன்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

இந்தியா

3 mins ago

தமிழகம்

20 mins ago

வாழ்வியல்

11 mins ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

46 mins ago

சினிமா

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்