டென்னிஸ் வாழ்வே அச்சுறுத்தலுக்குள்ளான, தரவரிசை 418-ம் எண் வீராங்கனை யு.எஸ். ஓபன் காலிறுதியில்

By பிடிஐ

கடின உழைப்பும், மன உறுதியும் இருந்தால் வயதும் நோயும் ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்த வீராங்கனை ஈஸ்டோனியா நாட்டு டென்னிஸ் வீராங்கனை கயா கனேபி ஆவார். இவர் உலக டென்னிஸ் தரவரிசை 418-ம் இடத்தில் இருந்து யு.எஸ். ஓபன் காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

32 வயதான கனேபி உலகத் தரவரிசை 15-ம் இடத்தில் இருந்தவர். ஏதோ இனம்புரியாத வைரஸ் நோய் காரணமாக இரண்டு கால்களும் முடமாகும் அளவுக்கு அவர் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது டென்னிஸ் வாழ்க்கையே கேள்விக்குறியானது.

ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து தனது தரவரிசை நிலை 418 என்பதையும் மறந்து ரஷ்யாவின் டாரியா கஸாட்கினாவை 6-4, 6-4 என்று வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் கனேபி.

தனது வெற்றிகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த கனேபி, “நாம் நேசிப்பதைச் செய்ய வேண்டும், அப்படிச் செய்தால் நாம் நினைப்பது நம்மைத் தேடி வரும்” என்கிறார் இந்த உறுதிபடைத்த வீராங்கனை கனேபி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்