நியூஸிலாந்து அணி அறிவிப்பு: திறமையின் கீழ் எஞ்சிய 6 வீரர்கள் தேர்வு

By செய்திப்பிரிவு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்கும் நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 9 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டித் தொடர் அக்டோபர் 22-ம் தேதி தொடங்குகிறது.

இதைத் தொடர்ந்து டி 20 தொடர் நடைபெறும். இந்நிலையில் இந்த தொடருக்கான நியூஸிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறந்த திறனை வெளிப்படுத்தத் தவறிய ஆல்ரவுண்டர்களான ஜிம்மி நீஷாம், நெய்ல் புரூம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் 9 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். மீதம் உள்ள 6 வீரர்கள் இந்தியாவில் தற்போது விளையாடி வரும் நியூஸிலாந்து ஏ அணியில் இருந்து சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

நியூஸிலாந்து ஏ அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா ஏ அணிக்கு எதிராக நான்கு நாட்கள் கொண்ட இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் முடிவடைந்ததும் இரு அணிகளும் 5 ஒருநாள் போட்டிகளில் மோதுகின்றன. இந்தத் தொடர் அக்டோபர் 15-ம் தேதி முடிவடைகிறது. இதில் சிறப்பாக செயல்படும் 6 வீரர்களை இந்தியாவுக்கு எதிரான தொடரில் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

நியூஸிலாந்து அணி விவரம்:

வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், மார்ட்டின் கப்தில், டாம் லதாம், டிரென்ட் போல்ட், காலின் டி கிராண்ட்ஹோம், ஆடம் மில்னே, மிட்செல் சான்ட்நெர், டிம் சவுத்தி.

இதற்கிடையே இரு அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி (அக்டோபர் 28-ம் தேதி) லக்னோவில் இருந்து கான்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

33 mins ago

வணிகம்

48 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்