தோனியை விரைவில் வீழ்த்துவது அவசியம்: ஆடம் ஸாம்ப்பா

By விருத்தாயன் பட்டாச்சார்யா

 

தனது ஐபிஎல் சகாவான (புனே சூப்பர் ஜெயண்ட்ஸ்) தோனியை விரைவில் வீழ்த்துவது அவசியம் என்று ஆஸ்திரேலிய லெக்ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 11/3 பிறகு 87/5 என்று சரிவு கண்ட இந்திய அணியை தனது உறுதி, அனுபவத்தினால் தோனி தூக்கி நிறுத்தினார், இவர் நின்றதோடு, ஹர்திக் பாண்டியாவுக்கு பெரிய தூண்டுகோலாக அமைந்தார், இதனால் ஆஸ்திரேலியா போட்டியை இழக்க நேரிட்டது.

இந்நிலையில் கொல்கத்தாவில் வெற்றி பெற்றால்தான் இழந்த உத்வேகத்தை ஆஸ்திரேலிய அணி பெற முடியும் என்ற நிலையில் ஆடம் ஸாம்ப்பா கூறியதாவது:

தோனி இதனை நீண்ட காலமாகச் செய்து வருகிறார். நெருக்கடியில் இப்படிப்பட்ட இன்னிங்ஸ்களை அவர் நிறைய ஆடி வருகிறார். தனது இன்னிங்ஸை அவர் கட்டமைத்த விதம் அவரது பலத்தையும் உறுதியையும் காட்டுகிறது. பாண்டியாவுடன் தோனியின் கூட்டணியை உடைப்பது முக்கியம். ஆனால் நாங்கள் நடு ஓவர்களில் சிறப்பாக வீசவில்லை என்பதும் உண்மை. தோனியின் விக்கெட் முக்கியமானது அவரை விரைவில் வீழ்த்துவது முக்கியம்.

பாண்டியாவுக்கு 3 ஃபுல் பந்துகளை வீசினேன் மூன்றுமே வெளியே சென்றது. அவை மோசமான பந்துகள், ஆனால் ஹர்திக் நன்றாக ஆடினார்.

எங்கள் பந்து வீச்சில் பன்முகத்தன்மை இருப்பதைப் போல் இந்திய அணியிலும் உள்ளது. குல்தீப், சாஹல் உண்மையில் அருமையாகவே வீசினர் 50 ஓவர்களாக இருந்திருந்தால் வேறு கதை, 21 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை தொடக்கத்தில் இழந்து விட்டு வெற்றிபெறுவது கடினமே.

இந்திய பேட்ஸ்மென்களுக்கு வீச வேண்டிய லெந்த் என்பது மைதானத்தின் அளவைப்பொறுத்து தீர்மானமாகும். சிறந்த வீரருக்கு சிங்கிள் கொடுத்து அவரை ஸ்ட்ரைக்கிலிருந்து வெளியே அனுப்புவது ஒருவகை உத்தி. ஹர்திக் பாண்டியாவை 2-3 ஓவர்கள் முன்னதாக வீழ்த்தியிருந்தால் ஆட்டம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். நாங்கள் 250-60 ரன்களைத்தான் விரட்ட வேண்டி வந்திருக்கும். 3 சிக்சர்களை அவர் என் ஓவரில் அடித்தது குறித்து வருத்தமாகவே உள்ளது. தவறுகளிலிருந்து திருத்திக் கொள்ள வேண்டும், கிரேட் பவுலர் ஷேன் வார்னுக்கும் இது நடந்தது, என்றார் ஸாம்ப்பா.

கொல்கத்தா ஒருநாள் போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்