FIFA WC 2022 | எம்பாப்பே, நெய்மர், மெஸ்ஸி... நாட்டுக்காக கோப்பையை வெல்லப் போகும் பிஎஸ்ஜி நட்சத்திரம் யார்?

By செய்திப்பிரிவு

தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் காலிறுதி சுற்றுக்கு எம்பாப்பே, நெய்மர், மெஸ்ஸி என மூவர் விளையாடும் அணிகளும் தகுதி பெற்றுள்ளன. இவர்கள் மூவரும் PSG கிளப் அணிக்காக ஒன்றாக இணைந்து விளையாடி வருகின்றனர். அந்த அணியின் முன்கள வீரர்களான இவர்கள் மூவரில் யார் இப்போது தங்கள் நாட்டுக்காக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் ரவுண்ட் ஆப் 16 சுற்றுப் போட்டிகள் இன்றோடு நிறைவு பெற உள்ளது. வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று காலிறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. நெதர்லாந்து, அர்ஜென்டினா, இங்கிலாந்து, பிரான்ஸ், குரோஷியா மற்றும் பிரேசில் என ஆறு அணிகள் இதுவரை காலிறுதியில் விளையாட தகுதி பெற்றுள்ளன. இன்று ஸ்பெயின் - மொராக்கோ மற்றும் போர்ச்சுகல் - சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் வாகை சூடும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில், நடப்பு உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் நாட்டின் PSG கால்பந்தாட்ட கிளப் அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, பிரேசிலின் நெய்மர் மற்றும் பிரான்ஸ் நாட்டின் எம்பாப்பே ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

இந்த மூன்று பேரில் தங்கள் நாட்டுக்காக உலகக் கோப்பையை வென்று கொடுக்கப்போகும் வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்துள்ளது. எம்பாப்பே, கடந்த 2018 உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் விளையாடியவர். இறுதிப் போட்டியில் கோல் பதிவு செய்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக கோல்களை பதிவு செய்த வீரராகவும் அவர் உள்ளார். பிரான்ஸ் அணிக்காக 5 கோல்களை நடப்பு தொடரில் மட்டும் பதிவு செய்துள்ளார்.

மெஸ்ஸி 3 கோல்களை நடப்பு உலகக் கோப்பையில் பதிவு செய்துள்ளார். தன் அணியின் சக வீரர் கோல் பதிவு செய்ய அசிஸ்ட் செய்துள்ளார். நெய்மர், ஒரே ஒரு கோலை பதிவு செய்துள்ளார். காயம் காரணமாக இரண்டு போட்டிகளை அவர் மிஸ் செய்திருந்தார். நாக்-அவுட் போட்டியில் மிகவும் கூலாக அந்த கோலை அவர் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூவரில் யார் கோப்பையை வெல்கிறார்கள் என்பதை பார்க்க சில நாட்கள் நாம் காத்திருக்க வேண்டி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

5 mins ago

சினிமா

10 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்