செஸ் ஒலிம்பியாட் 2022 | தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற அணிகளின் விவரம்

By செய்திப்பிரிவு

நடப்பு செஸ் ஒலிம்பியாட் தொடர் தமிழகத்தில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உட்பட பல்வேறு பதக்கங்கள் மற்றும் விருதுகளை வென்ற அணிகள் குறித்து பார்ப்போம்.

செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜூலை 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி அன்று நிறைவு பெற்றுள்ளது. சர்வதேச நாடுகளை சேர்ந்த சுமார் 1,736 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த தொடரில் பங்கேற்று விளையாடினர். இதில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் பதக்கங்களை வென்ற அணிகள் குறித்து பார்ப்போம்.

ஓபன் பிரிவு

ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணியின் 20 வயதான நோடிர்பெக் யாகுபோவ், 16 வயதான ஜாவோகிர் சிந்தாரோவ், 20 வயதான ஷம்சிடின் வோகிடோவ் மற்றும் 27 வயதான ஜஹோங்கிர் வாகிடோவ் தங்கம் வென்றுள்ளனர். முதலிடம் பிடித்த அவர்களுக்கு ஹாமில்டன்-ரஸ்ஸல் கோப்பை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்மீனியா அணியின் சர்கிசியன் கேப்ரியல், மெல்குமியன் ஹ்ரான்ட், பெட்ரோசியன் மானுவல் மற்றும் ஹோவன்னிசியன் ராபர்ட் வெள்ளி வென்றுள்ளனர்.

இந்திய ‘பி’ அணியின் குகேஷ், சரின் நிகல், பிரக்ஞானந்தா மற்றும் சத்வானி ரவுனக் ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்.

மகளிர் பிரிவு

மகளிர் பிரிவில் உக்ரைன் அணியின் முசிச்சுக் மரியா, முசிச்சுக் அன்னா, உஷெனினா அன்னா மற்றும் புக்ஸா நடாலியா தங்கம் வென்றுள்ளனர். இந்த பிரிவில் முதல் இடம் பிடித்த அந்த அணிக்கு வேரா மென்சிக் கோப்பை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜியாவின் Dzagnidze நானா, பாட்சியாஷ்விலி நினோ, ஜவகிஷ்விலி லேலா, அரபிட்ஸே மேரி அணியின் மகளிர் பிரிவில் வெள்ளி வென்றுள்ளனர்.

இந்திய மகளிர் ‘ஏ’ அணியின் கோனேரு ஹம்பி, வைஷாலி, தானியா சச்தேவ் மற்றும் குல்கர்னி பக்தி ஆகியோர் இந்த பிரிவில் வெண்கலம் வென்றுள்ளனர். இந்த அணிக்கு நோனா கப்ரின்டாஷ்விலி டிராபியும் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர தனிநபர் போர்டு பிரிவில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

ஆன்மிகம்

13 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

மேலும்