உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டி: காலிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி

By பிடிஐ

உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி ஜப்பானிடம் 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இருப்பினும் ஏற்கெனவே இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்ததால் டி பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது இந்திய அணி.

சீனாவின் ஹூன்ஷான் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால் 21-18, 21-6 என்ற நேர்செட்டில் ஜப்பானின் ஒஹூராவையும், பி.வி.சிந்து 21-11, 21-18 என்ற கணக்கில் யமகுச்சியையும் வீழ்த்தினர். இதனால் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றது.

ஆனால் அதன் பின்னர் ஜப்பான் அணி ஆவேசமாக விளையாடியது. இரட்டையர் பிரிவில் மிசாக்கி மட்சுடோமா-அயகா டகஹாஷி ஜோடி 21-11, 21-8 என்ற நேர்செட்டில் இந்தியா வின் ஜூவாலா கட்டா-ஷிக்கி ரெட்டி ஜோடியை வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்திலும் ஜப்பான் பதிலடி கொடுத்தது.

தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள சயாகா ஷடோ, 113-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ருத்விகா ஷிவானியை 21-7, 21-14 என்ற நேர்ட்டில் வீழ்த்தினார். இதனால் ஆட்டம் 2-2 என சமநிலை பெற்றது. வெற்றியை தீர்மானிப்பதாக கடைசியாக நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டம் இருந்தது.

இதில் சுமார் 1 மணி நேரம் 9 நிமிடங்கள் போராடி ஷிஸூகா மட்சு-மமி நைட்டோ ஜோடி 15-21, 21-19, 21-16 என்ற செட் கணக்கில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-பி.வி.சிந்து ஜோடியை தோற்கடித்தது. முடிவில் ஜப்பான் அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று டி பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதியில் நுழைந்தது.

இந்திய அணி முதல் இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, ஜெர்மனியை தோற்கடித்திருந் தால் இரண்டாவது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றது.

ஆடவர் பிரிவுக்கான தாமஸ் கோப்பை போட்டியில் இந்தோ னேஷியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் இந்தியா 0 - 5 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஏற்கெனவே இரு ஆட்டங்களில் தோல்வி கண்டிருந்ததாலும் இந்திய ஆடவர் அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.

1948-49ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் தாமஸ் கோப்பையில் இந்தியா ஒரே முறை தான் லீக் சுற்றை கடந்துள்ளது. 2006ல் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தது. 2014-ம் ஆண்டு தொடரிலும் லீக் சுற்றுடன் இந்தியா வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

16 mins ago

சினிமா

34 mins ago

வாழ்வியல்

16 mins ago

தமிழகம்

52 mins ago

க்ரைம்

59 mins ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்