IPL 2022 | யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரம் - பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் 

By செய்திப்பிரிவு

மும்பை : பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

15-வது ஐபிஎல் சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய 52-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, பஞ்சாப் அணிக்கு, ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவான் இணை துவக்கம் கொடுத்தது. இருவரும் இணைந்து அணிக்கு நல்லதொரு தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஆனால், இந்த இணையை 5-வது ஓவரில் ரவிசந்திரன் அஸ்வின் பிரித்தார். கேட்ச் கொடுத்து அவுட்டாகி 12 ரன்களில் நடையைக் கட்டினார் தவான்.

அடுத்து வந்த பானுகா ராஜபக்ச 27 ரன்களில் சாஹல் பந்தில் போல்டானார். மயங்க் அகர்வாலும் 15 ரன்களில் கிளம்ப, ஒருபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜானி பேர்ஸ்டோவை 56 ரன்களில் வெளியேற்றினார் சாஹல்.

இதனையடுத்து 15 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 122 ரன்களை சேர்த்திருந்தது. இரண்டு சிக்ஸர்களுடன் அதிரடியாக ஆடி வந்த லியாம் லிவிங்ஸ்டன், 22 ரன்களில் விக்கெட்டானார். இதைத் தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 189 ரன்களை குவித்தது. ஜித்தேஷ் ஷர்மா 38 ரன்களுடனும், ரிஷி தவான் 5 ரன்களுடனும் பேட்ஸ்மேன்களாக களத்தில் இருந்தனர்.

ராஜஸ்தான் அணி தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ்பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை துவக்கம் கொடுத்தது. 4-வது ஓவரில் 30 ரன்களில் வெளியேறினார் பட்லர். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 23 ரன்களில் வெளியேற, அணிக்கு பக்க பலமாக இருந்து 41 பந்துகளில் 68 ரன்களைச் சேர்த்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலை அர்ஷ்தீப் சிங் விக்கெட்டாக்கினார்.

அடுத்து, தேவ் தட் படிக்கல் 31 ரன்களில் நடையைக் கட்ட 19.4 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான். ஹெட்மேயர் 31 ரன்களிலும், ரியான் ப்ராக் ரன் எதுவும் எடுக்காமலும் பேட்ஸ்மேன்களாக களத்தில் இருந்தனர்.

பஞ்சாப் அணி தரப்பில், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், ரபாடா, ரிஷி தவான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்