IPL 2022 | ‘கேப்ல போயிருக்கு நாலு ரன்’ - ஹைடனுக்கு தமிழ் வர்ணனை பயிற்சி தந்த பத்ரிநாத்

By செய்திப்பிரிவு

ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளில் வர்ணனை செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் சிஎஸ்கே-வின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடனுக்கு தமிழில் வர்ணனை செய்ய சொல்லிக் கொடுத்து அசத்தியுள்ளார் பத்ரிநாத்.

நடப்பு ஐபிஎல் சீசனில் 22 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. மும்பையைத் தவிர மற்ற அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. மும்பையும் வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் அணி எது என்ற பரபரப்பு மேலும் எகிறக் கூடும். இந்தத் தொடரில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வர்ணனை செய்யும் பணிகளை கவனித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான பத்ரிநாத், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடனுடன் இந்த பணிகளை கவனித்து வருகிறார். இந்நிலையில், ஹைடனுக்கு தமிழ் மொழியில் கிரிக்கெட் வர்ணனை செய்யச் சொல்லிக் கொடுத்துள்ளார் பத்ரிநாத். அந்தக் காட்சியை அப்படியே கேமராவில் பதிவு செய்து சமூக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார்.

‘கேப்ல போயிருக்கு நாலு ரன்’, ‘இறங்கி வந்து பவுலர் தலைக்கு மேல சிக்ஸு’ என கிரிக்கெட் வர்ணனைகளை தமிழில் சொல்லிக் கொடுத்துள்ளார் பத்ரி. அதனை உச்சரிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டு இருந்தாலும், வார்த்தைகளைத் திருப்பிச் சொல்லி அசத்தியுள்ளார் ஹேடன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்