IPL 2022 | விராட், அனுஜ் ராவத் அதிரடி - நான்காவது தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ்

By செய்திப்பிரிவு

புனே: இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்த தொடரில் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது பெங்களூரு அணி.

ஐபிஎல் 15வது சீசனின் 18வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையில் ஆட்டம் நடைபெற்றது. புனே மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. முன்கள வீரர்களும், பின்கள வீரரர்களும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். அந்த அணியின் சூர்ய குமார் யாதவ் மட்டுமே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 68 ரன்கள் சேர்த்தார். அவரின் உதவியால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓ ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு சீனியர் - ஜூனியர் காம்போவில் அனுஜ் ராவத் மற்றும் டு பிளசிஸ் இருவரும் ஓப்பனிங் செய்தனர். டு பிளசிஸ் வழக்கம் போல ஸ்லோ ஸ்டார்ட் கொடுத்தாலும், மறுபுறம் இருந்த அனுஜ் ராவத் மும்பை பவுலர்களை சோதித்தார். இந்த இணை பவர் பிளேயை தாண்டி 8 ஓவர்கள் நீடித்தது. மெதுவாக ஆடிவந்த டு பிளசிஸ் 16 ரன்கள் எடுத்திருந்த போது உனட்கட் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து முதல் விக்கெட்டாக வெளியேறினார்.

இதன்பின் தான் பெங்களூரு அணியின் ஆட்டம் சூடுபிடித்தது. அனுஜ் ராவத் உடன் விராட் கோலி இணைந்தார். நீண்ட நாள்களுக்கு பிறகு பார்முக்கு திரும்பிய விராட், அனுஜ் உடன் சேர்ந்து மும்பை பவுலிங்கை சிதறடித்தார். இதனால் வெற்றி இலக்கை வேகமாக நெருங்கவும் செய்தனர். 19 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்ட போது அனுஜ் ராவத் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அனுஜ் ராவத் 66 ரன்கள் எடுத்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த விராட் கோலியும் இறுதிக்கட்டத்தில் பேபி ஏபி ஓவரில் எல்பி ஆகி சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். 48 ரன்களில் கோலி வெளியேறினாலும், இதன் பின் வந்த மேக்ஸ்வெல் முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பி அணியை வெற்றிபெற வைத்தார். இறுதியில் 18.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது பெங்களூரு.

மும்பை அணி தரப்பில் உனட்கட் மற்றும் பேபி ஏபி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தொடர்ச்சியாக இது மும்பைக்கு நான்காவது தோல்வி ஆகும். அதேநேரம் பெங்களூரு அணி தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

வலைஞர் பக்கம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

45 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்