IPL 2022 | கேட்ச்களை கோட்டைவிட்டதால் வந்த வினை - லக்னோ அணியிடம் போராடி வீழ்ந்த சென்னை

By செய்திப்பிரிவு

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடி வீழ்ந்தது.

ஐபிஎல் 15வது சீசனின் 7வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்து வருகிறது. 210 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஒப்பனர்கள் கேஎல் ராகுல், குயிண்டன் டி காக் இருவரும் சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இருவரையும் பிரிக்க சென்னை பவுலர்கள் பல முயற்சி எடுத்து பார்த்தனர். ஆனால் கைகூடவில்லை. அப்படி சொல்வதை கைகூடியதை கோட்டைவிட்டார்கள் சென்னை பீல்டர்கள். பிராவோவின் முதல் ஓவரிலேயே டி காக் மொயின் அலி கைக்கே பந்தை அடித்தார். எளிதான அந்தக் கேட்சை மொயின் அலி மிஸ் செய்வார். இதேபோல் மொயின் அலி ஓவரில் கேஎல் ராகுல் பந்தை தூக்கி அடிக்க முயற்சிப்பார். இந்தமுறை துஷார் தேஷ்பாண்டே கேட்ச்சை மிஸ் செய்தார்.

இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி முதல் விக்கெட்டுக்கு இந்தக் கூட்டணி 99 ரன்கள் சேர்த்தது. பார்ட் டைம் பவுலரான பிரிட்டோரியஸே இந்தக் கூட்டணியை பிரிப்பார். முதல் விக்கெட்டாக அவர் 40 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுலை வீழ்த்துவார். அடுத்த சில ஓவர்களில் மனிஷ் பாண்டே வந்த வேகத்தில் ஐந்து ரன்களுடன் சென்றார். எனினும், எவின் லூயிஸ் உடன் இணைந்து டி காக் தனது அதிரடியை தொடர்ந்தார். அரைசதம் கடந்து 61 ரன்கள் எடுத்திருந்த அவரை பிரிட்டோரியஸ் அவுட் ஆக்கினார்.

ஒருக்கட்டத்தில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு 34 ரன்கள் அடிக்க வேண்டும். ஆயுஷ் பதோனி 19வது ஓவரை வீசிய ஷிவம் துபேவின் முதல் பந்தையே சிக்ஸருக்கு பறக்கவிட்டார். லூயிஸ் தன் பங்குக்கு நான்கு மற்றும் ஐந்தாவது பந்தில் பவுண்டரிகளும், கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தும் ஆட்டத்தின் விறுவிறுப்பை மேலும் அதிகரித்தார். இதனால் 6 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

இறுதி ஓவர் முகேஷ் சவுதிரியிடம் ஒப்படைத்தார் சென்னை கேப்டன் ஜடேஜா. அவர் முதல் இரண்டு பந்துகளையுமே வொயிடாக வீச, அடுத்த பந்தை ஆயுஷ் பதோனி சிக்ஸ் அடித்து லக்னோ வெற்றியை உறுதி செய்தார். இதன்மூலம் 19.3 ஓவர்களேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. எவின் லூயிஸ் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் உடன் ராபின் உத்தப்பா ஓப்பனிங்கில் இறங்கினார். முதல் போட்டியில் டக் அவுட் ஆன ருதுராஜ் இந்தமுறையும் ஏமாற்றம் அளித்தார்.

ஆவேஷ் கான் வீசிய மூன்றாவது ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதனால் சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. எனினும், உத்தப்பா உடன் நட்சத்திர வீரர் மொயின் அலி பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் சேர்ந்து பவர்பிளே ஓவர்களை துவம்சம் செய்தனர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதேவேகத்தில், உத்தப்பா அதிரடியாக அரைசதமும் அடித்தார். அரைசதம் கடந்த வேகத்தில் அவுட் ஆகவும் செய்தார். இவர்கள் கூட்டணியை ரவி பிஷ்னோய் பிரித்தார்.

இதன்பின் சில ஓவர்களில் 35 ரன்கள் எடுத்த மொயின் அலியும் ஆவேஷ் கான் வேகத்தில் வீழ்ந்திட, இளம் வீரர் ஷிவம் துபே அணியின் மொமெண்டத்தை விடாமல் தொடர்ந்தார். இதனால் ரன் ரேட் 10க்கும் குறையாமலே சென்றது. ஒரு ரன்னில் அரைசதம் கடக்கும் வாய்ப்பை நழுவவிட்டு 49 ரன்களில் ஷிவம் துபே அவுட் ஆனாலும், அவருக்கு பிறகு அம்பதி ராயுடு மற்றும் தோனி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிரடியை தொடர்ந்தனர். தோனி வந்த முதல் இரண்டு பந்துகளிலேயே சிக்ஸர், பவுண்டரி என விளாசினார். இறுதி ஓவரில் ஆண்ட்ரு டை அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். எனினும், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் சேர்த்தது.

தோனி 16 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றார். லக்னோ அணித்தரப்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் மற்றும் ஆண்ட்ரு டை தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

43 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்