கவாஜா முஸ்லிம் என்பதற்காக ஷாம்ப்பைன் மதுக் கொண்டாட்டத்தை நிறுத்திய ஆஸி.கேப்டன் பாட் கம்மின்ஸின் நாகரிகம்

By ஏஎன்ஐ

ஹோபர்ட்: ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் டெஸ்ட் கோப்பையை வென்றபின், ஷாம்ப்பைன் மதுக் கொண்டாட்டத்தில் ஈடுபட இருந்தபோது, கவாஜா முஸ்லிம் என்பதற்காக அதை நிறுத்தி மாற்று மதத்தினருக்கான மரியாதையை அளித்த கேப்டன் கம்மின்ஸ் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் கோப்பையை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றது. ஹோபர்ட்டில் கடைசியாக நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இதன் மூலம் ஆஷஸ் கோப்பையை 3-வது முறையாக ஆஸ்திரேலிய அணி தக்கவைத்துக் கொண்டது.

இந்த வெற்றிக்குப் பின் ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து, ஷாம்ப்பைன் மது பாட்டிலைத் திறந்து மதுவை பீய்ச்சி அடிக்கத் தயாராகினர். டேவிட் வார்னர், ஹாரிஸ், ஸ்டார்க் ஆகியோர் ஷாம்ப்பைன் மது பாட்டிலைத் திறக்க முயன்றபோது, மது தனது மதத்துக்கு ஆகாது என்பதை உணர்ந்த கவாஜா மேடையிலிருந்து கீழே இறங்கினார்.

இதனால் புகைப்படம் எடுக்கும்போது கவாஜா இல்லை, அவரைத் தேடியபோது, அவர் கீழே அமர்ந்திருப்பதை கேப்டன் கம்மின்ஸ் கவனித்தார். அவரை மேலே வாருங்கள் என்று கம்மின்ஸ் அழைத்தார்.

அப்போது, உடன் இருந்த வீரர்கள் கவாஜாவின் மதத்தைப் பற்றித் தெரிவித்து, இஸ்லாத் மதத்துக்கு மது விரோதமானது. அது இருக்கும் இடத்துக்கு கவாஜா வரமாட்டார் எனத் தெரிவித்தனர்.

இதைக் கேட்ட கம்மின்ஸ், ஷாம்ப்பைன் மது பாட்டில் திறப்பதை சகவீரர்களிடம் நிறுத்துமாறு கூறி, உஸ்மான் கவாஜாவை மேடைக்கு அழைத்தார். அவரையும் உடன் அமரவைத்து புகைப்படம் எடுத்தபின், கவாஜா மேடையிலிருந்து கீழே இறங்கியபின் ஷாம்ப்பைன் மது பாட்டிலைத் திறந்தனர்.

மாற்று மதத்தினருக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸின் நாகரிகம், பெருந்தன்மை ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

உஸ்மான் கவாஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “இந்த வீடியோ உங்களைக் காண்பிக்கவில்லை, என்னுடைய அணியினர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கிறது. என்ன நடக்கிறது எனத் தெரியாது. வழக்கமான ஷாம்ப்பைன் மதுக் கொண்டாட்டத்தை நிறுத்திவிட்டு என்னையும் அழைத்தனர். விளையாட்டில் உள்ள உள்ளடக்கம் மற்றும் நமது மதிப்புகள் மிக முக்கியம். நாங்கள் சரியான திசையில் செல்வது போல் உணர்கிறேன்” என்று புகழ்ந்துள்ளார்.

சிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளேட்டுக்கு கம்மின்ஸ் அளித்த பேட்டியில், “ஆஸ்திரேலிய அணியில் பல்வேறுபட்ட வீரர்கள் இருக்கிறோம். எதையாவது கொண்டாட வேண்டும் என விரும்பினால், ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடையும் வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எங்கள் வீரர்கள் அருமையாக நடந்து கொண்டார்கள். ஒருவர் மீது ஒருவர் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார்கள். அதனால்தான் புகைப்பட செஷனில் அனைவரும் இருக்க விரும்பினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்