ஒமைக்ரான் பற்றி கவலையில்லை: இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கா தொடர் உறுதி: வரும் 17ம் தேதி புறப்படுகிறது

By ஏஎன்ஐ


தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 3ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல்டெஸ்ட் போட்டி வரும் 17ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

ஆனால், தென் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் அங்கு இந்திய அணி செல்ல அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்தது. 7 வாரங்கள் இந்திய வீரர்கள் தென் ஆப்பிரி்க்காவில் இருக்கும் நிலையில் அவர்களுக்கு அங்கு பாதுகாப்பான சூழல் இருக்குமா என அஞ்சப்பட்டது.

பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கொல்கத்தாவில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆலோசனை முடிவு குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

முன்பு திட்டமிட்டபடி இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணம் வரும் 9ம் தேதி தொடங்குவதாக இருந்தது. முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில்வரும் 17ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால், அதற்குப் பதிலாக முதல் டெஸ்ட் போட்டி 26ம் ேததி பாக்ஸிங் டே அன்று நடக்கிறது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்படுவதும் ஒரு வாரம் தாமதமாக 17ம் தேதி புறப்படுகிறது.

தென் ஆப்பிரி்க்க அணியுடன் 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாடுகிறது, டி20 தொடரை நடத்துவது குறித்து இரு வாரியங்களும் முடிவு செய்யும்.
அடுத்த 48 மணிநேரத்தில் இந்திய அணி விளையாட உள்ள மைதானங்கள் குறித்து உறுதி செய்து அறிவிப்பதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடக்கும் இடங்களும் கடுமையான பயோ-பபுள் சூழலுக்குள் கொண்டுவரப்படும்.

கடுமையான கரோனா தடுப்பு விதிகளை இரு அணி வீரர்களும் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுவார்கள். இரு அணி வீரர்களும் பாதுகாப்பான பயோ-பபுள்சூழலுக்குள் இருக்க வேண்டும் என்பதற்காக போட்டியை நடத்த புதிதாக இரு மைதானங்களை அடுத்த 48 மணிநேரத்துக்குள் தென் ஆப்பிரிக்க வாரியம் அறிவி்க்கும் இவ்வாறு பிசிசிஐ அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்