நியூஸி.டெஸ்ட்: பேட்டிங் ஃபார்மில் இல்லாத ரஹானேவை கேப்டனாக்கியது சரியான முடிவா? ஆகாஷ் சோப்ரா கேள்வி

By செய்திப்பிரிவு


ெடஸ்ட் போட்டிகளில் பேட்டிங் ஃபார்மில் இல்லாத அஜின்கியே ரஹானேவை நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக நியமித்தது சரியான முடிவா என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு மட்டும் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பையில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு அணியில் விராட் கோலி இணைந்துவிடுவார்.

ஆனால் கடந்த பல டெஸ்ட் போட்டிகளாக ரஹானே பேட்டிங் ஃபார்மில் இல்லாத நிலையில் அவரை எவ்வாறு கேப்டனாக நியமித்தார்கள். கடந்த 2 ஆண்டுகளில் ரஹானேயின் டெஸ்ட் சராசரி மோசமாகச்சரிந்துவிட்ட நிலையில் எவ்வாறு கேப்டனாக்கினார்கள் என்று ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளதாவது:

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு ரஹானேவை கேப்டனாக்கி இருக்கிறார்கள். ஆனால் உண்மையை நேர்மையாகப் பேச வேண்டும். இங்கிலாந்து எதிராக கடைசி டெஸ்ட் நடந்திருந்தால், நிச்சயம் ரஹானே அணியில் தேர்வு செய்யப்பட்டது கேள்வியை எழுப்பியிருக்கும்.

ரஹானேவை எனக்கும் பிடிக்கும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அவரின் பேட்டிங் சராசரி படிப்படியாகச் சரிந்து, 20 புள்ளிகளாக வந்துவிட்டது. ரஹானேவின் சராசரி இந்த அளவு மோசமாகக் குறைந்தது இல்லை .

இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் ரஹானே அரைசதம் அடித்திருக்காவிட்டால், நிச்சயமாக அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார். இந்த சூழலில் இந்திய அணிக்கு கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டிருப்பதால், நியூஸிலாந்து தொடர் ரஹானேவின் எதிர்காலத்துக்கு முக்கியமானது. அணியில் தொடர்ந்து தனது இடத்தைத் தக்கவைக்க ரஹானே ரன்கள் அடித்தாக வேண்டும்.

பொதுவாக ரோஹித் சர்மா கேப்டன், ரஹானே துணைக் கேப்டன் என்றுதான் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ரஹானே கேப்டனாக்கப்பட்டுள்ளார். இந்த நம்பிக்கையை ரஹானே ரன்கள் அடித்து காப்பாற்ற வேண்டும். கடந்த ஓர் ஆண்டாக ரஹானே பேட்டிங் தரம் சரியாக இல்லை என்பதை நினைக்க வேண்டும்

இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

வர்த்தக உலகம்

25 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்