ஓய்வா.. இன்னும் ஒரு உலகக் கோப்பை விளையாட ஆசை: கிறிஸ் கெயில் கலகலப்பு பேட்டி

By செய்திப்பிரிவு


கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு. நான் அப்படி சொல்லவே இல்லையே. இன்னும் ஒரு உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறேன். ஆனால், எனக்கு அனுமதியளிப்பார்களாக எனத் தெரியவில்லை என்று மே.இ.தீவுகள் அணி வீரர் தி யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெயில் தெரிவித்தார்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் ெவன்ற மே.இ.தீவுகள் அணி இந்த முறை சூப்பர்-12 சுற்றோடு அரையிறுதிக்குகூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதுமட்டுமல்லாம்ல 2022ம் ஆண்டு ஆஸ்திேரலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப்போட்டியில் தகுதிச்சுற்றில் விளையாட வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டது.

இந்த சூழலில் மூத்த வீரரும், அனுபவ ஆல்ரவுண்டருமான டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் விளையாடிய பிராவோவுக்கு சக வீரர்கள் பிரியாவிடை அளித்தனர்.

இந்தப் போட்டி முடிந்தபின் ஐசிசியின் ஃபேஸ்புக் பக்கத்தில் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ்கெயில் கலகலப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்த உலகக் கோப்பைத் தொடரோடு ஓய்வு பெறப்போகிறீர்கள் என்று தெரிவித்திருந்தீர்களே எனக் கேள்வி எழுப்பப்பட்து.

அதற்கு கிறிஸ் கெயில் பதில் அளிக்கையில் “ நான் ஓய்வு ஏதும் அறிவிக்கவில்லையே. நான் ஜமைக்காவில் என்னுடைய மக்கள் முன் கடைசியாக விளையாடிவிட்டு அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்
அப்படி எந்த எண்ணமும் இல்லாமல் இருந்திருந்தால், நான் எப்போதோ ஓய்வு அறிவித்துவிட்டு, பிராவோவுடன் இமைந்திருந்திருப்பேன். ஆனால், நான் அவ்வாறு என் மக்களுக்கு நன்றி செலுத்தாமல் ஓய்வு பெற முடியாது.

நான் மற்றொரு உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட விருப்பமாக இருக்கிறேன். ஆனால், எனக்கு வாய்ப்பு வழங்குவார்களா என எனக்குத் தெரியாது. நான் ஓய்வு குறித்து பேசியதெல்லாம் ரசிகர்களிடம் நகைச்சுவைக்காகப் பேசினேன். இது என்னுடைய கடைசி உலகக் கோப்பைப் போட்டி என்று அவர்களிடம் கிண்டல் செய்தேன்.

நான் இந்த உலகக் கோப்பையை விளையாட வந்தபோது என்னுடைய தந்தை மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். நான் முதல் போட்டியில் பங்கேற்றபோதுகூட என் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது குறித்து தெரியாது. அதன்பின்புதான் தெரியவந்தது ஆனால், பயோபபுளைவிட்டு செல்ல நேரிடும் என்பதால் நான் ஜமைக்கா செல்லவில்லை.

இந்த தொடர் முடிந்துவிட்டதால் நான் ஜமைக்காவுக்குதான் நேரடிாயகச் செல்கிறேன். என் தந்தை 91 வயதில் உயிருக்கு போராடி வருகிறார். நான் அவரைக் காணச் செல்கிறேன். சில நேரங்களில் ஒரு வீரர் பல விஷயங்கள் மனதில் வைத்து விளையாடுவார் ஆனால் அவரால் எதையும் வெளிப்படுத்த முடியாது. அதைத்தான் நாங்களும் இங்கு செய்தோம்.

நான் மிகவும் உறுதியான மனிதர். என்னுடைய கடினமான உழைப்பைப் பலரும் பார்த்துள்ளார்கள். ஆனால் எந்தவிதமான ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாகப் பணியாற்றுவேன். எனக்கிருக்கும் புத்தியையும் நேர்த்தியாகப் பயன்படுத்துவேன்.

நான் வறுமையில் இருந்து வளர்ந்துவந்துதான் இப்போது ஏராளமாக சம்பாதித்துள்ளேன். நான் வளரும்போது, என்னிடம் ஏதும் இல்லை, எந்தச் செல்லவச் செழிப்பும் இல்லை. நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியபோது, என் தாயிடம் உங்களுக்கு என்னுடைய முதல் வருமானத்தில் வீடு வாங்கித் தருகிறேன். கார் வாங்கித் தருகிறேன் என வாக்குறுதியளித்தேன்.

கடந்த 20 ஆண்டுகளாக மே.இ.தீவுகள் அணிக்காக பல நாடுகளுக்குச் சென்று விளையாடியிருக்கிறேன். இந்த விஷயங்களை எல்லாம் உங்களோடு இந்த உயர்ந்த இடத்திலிருந்து பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பளித்த கடவுளுக்குதான் நன்றி கூற வேண்டும்.

இவ்வாறு கெயில் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்