என் பேட்டிங் ஃபார்ம் பற்றிப் பேசுவது சிறுபிள்ளைத்தனம்: வார்னர் கலகலப்பு

By ஏஎன்ஐ

என்னுடைய பேட்டிங் ஃபார்ம் பற்றிச் சிலர் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என்று ஆஸ்திேரலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போதிலிருந்து மோசமாக விளையாடி வருகிறார். ஐபிஎல் டி20 தொடரில் பேட்டிங் மிக மோசமாக இருந்ததால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து ஓரம் கட்டி பெஞ்ச்சில் அமரவைக்கப்பட்டார். இந்திய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் சிறப்பாக ஆடாமல் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

டி20 உலகக் கோப்பை தொடங்கியபின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்திலும் வார்னர் 14 ரன்னில் சொதப்பி ஆட்டமிழந்தார். இதனால் டேவிட் வார்னர் பேட்டிங் ஃபார்ம் குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், கேப்டன் ஆரோன் பின்ச், அதை மறுத்தார். வார்னர் பேட்டிங் குறித்து தனக்கு நன்கு தெரியும் என்றும், அவர் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது என்றும் ஆரோன் பின்ச் தெரிவித்தார்.

இந்நிலையில் டேவிட் வார்னர் கிரிக்கெட்.காம் தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “என்னுடைய கண்ணோட்டத்தில், என்னுடைய பேட்டிங் ஃபார்ம் குறித்து சிலர் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. இவர்கள் பேசுவதைப் பார்த்தால் எனக்குச் சிரிப்பாக இருக்கிறது. இதுவரை நான் எந்தப் போட்டியிலும் கிரிக்கெட் விளையாடவில்லையே. ஐபிஎல் தொடரில் நான் 2 போட்டிகள் மட்டும்தான் ஆடினேன். மற்ற அனைத்து வாய்ப்புகளையும் இளைஞர்களுக்கு வழங்கி வழிவிட்டேன். எப்படி என்னுடைய ஃபார்ம் பற்றிப் பேசுகிறார்கள்?

நான் நல்ல ஃபார்மில் இருக்கிறேன். நிச்சயமாக போட்டியின் அடுத்த கட்டத்துக்கு என்னுடைய ஆட்டம் செல்லும் என நம்புகிறேன். பயிற்சியின்போது நன்றாக பேட் செய்தேன். என்னுடய கண்ணோட்டத்தில், நான் நன்றாக இருக்கிறேன். பயிற்சிப் போட்டிகள், ஒரு காரணத்துக்காகப் பயற்சிக்காக நடத்தப்படுபவை. அதைக் கணக்கில் எடுக்கத் தேவையில்லை.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நான் என்னுடைய கால்களை எவ்வாறு நகர்த்தி ஆடுவது என அனைத்தையும் தெரிந்துகொண்டேன். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இன்னும் ஒரு பவுண்டரி அடித்திருந்தால், என்னுடைய நல்ல இன்னிங்ஸ் தொடங்கியிருக்கும் என நான் உணர்கிறேன்''.

இவ்வாறு வார்னர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

51 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்