#EURO 2020 ரொனால்டோவுக்கு கோல்டன் பூட் விருது: இத்தாலி வீரர் போனுசி புதிய சாதனை

By ஏஎன்ஐ


யூரோ கோப்பையை 50 ஆண்டுகளுக்குப்பின் இத்தாலி அணி வென்றாலும், இந்தத் தொடரில் கோல்டன் பூட்(தங்க ஷீ) விருதை போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ முதல்முறையாக வென்றுள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் பெனால்டி சூட் முறையில் இங்கிலாந்து அணியை 2-3 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இத்தாலி அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஏறக்குறைய 52 ஆண்டுகளுக்குப்பின் யூரோ கோப்பையை இத்தாலி கைப்பற்றியுள்ளது. 4 முறை பைனலுக்கு வந்து, அதில் இருமுறை இத்தாலி அணி வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் ஆட்டநேரத்தில் ஒரு கோலையும், பெனால்டி சூட் முறையில் ஒரு கோலையும் அடித்த இத்தாலி வீரர் லியானார்டோ போனுசி ஆட்டநாயகன் விருது பெற்றார். அதுமட்டுமல்லாமல் யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய வயதான வீரர் மட்டுமல்லாமல், வயதான வீரராக இருந்து கோல் அடித்தவர் என்ற பெருமையை போனுசி பெற்றார். லியானார்டோ போனுசிக்கு தற்போது 34 வயது 74 நாட்கள் ஆகிறது.

இந்தத் தொடரில் அதிகமான கோல்களை அடித்த வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் பூட் விருது போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது. இந்த 5 கோல்களில் ரொனால்டோ 3 கோல்களை பெனால்டி சூட் முறையிலும் 2 கோல்களை ஹங்கேரி, ஜெர்மனி அணிக்காகவும் அடித்துள்ளார்.

ஒரு கோல் அடிக்க ரொனால்டி பாஸ் செய்துள்ளார். இந்த அடிப்படையில் ரொனால்டோவுக்கு கோல்டன் பூட் விருது வழங்கப்பட்டது. செக் குடியரசுஅணியின் ஃபார்வேர்ட் வீரர் பாட்ரிக் ஷிக் 5 கோல்கள் அடித்தபோதிலும், டைபிரேக்கர் முறையில் ரொனால்டோவுக்கு கோல்டன் பூட் விருது வழங்கப்பட்டது.

யூரோ கோப்பைத் தொடரில் அதிகமான கோல்களை அடித்த வீரர் என்ற வகையில் 14 கோல்களுடன் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். இதுவரை சர்வதேச அளவில் 109 கோல்கள் அடித்து, ஈரானின் அலி தியாவின் சாதனையை ரொனால்டோ சமன் செய்துள்ளார்.

யூரோ கோப்பையில் போர்ச்சுகல் அணிக்காக 24 முறை களமிறங்கி அதிகமான போட்டியில் விளையாடிய வீரர் எனும் பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். அதற்கு அடுத்தார்போல், ஜெர்மனி வீரர் பாஸ்டியன் ஸ்வின்ஸ்டீகர் 18 முறையும், இத்தாலி வீரர் ஜியான்லுகி ஃபபான் 17 முறையும் விளையாடியுள்ளனர். அதிகமான இறுதிப் போட்டிகளிலும் விளையாடிய வீரரும் ரொனால்டோதான், போர்ச்சுகல் அணிக்காக 5 முறை இறுதிப்போட்டியில் ரொனால்டோ களமிறங்கியுள்ளார், 2004, 2008, 2012, 2016,2020 ஆகிய ஆண்டுகளில் ரொன்டோ விளையாடியுள்ளார்.

லோத்தார் மாத்தாஸ், அலிசான்ட்ரோ டெல் பியாரோ, எட்வின் வான் டர் சார், லியான் துராம், ஜியாலுகி ஃபபான், லாடன் இப்ராஹிம்விக் ஆகியோர் 4 யூரோ இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்