#EURO2020 யூரோ கோப்பை: முதல்முறையாக இறுதிப்போட்டியில் இங்கிலாந்து: சொந்த கோலில் தோற்ற டென்மார்க்: 55 ஆண்டுகளுக்குப்பின் கிடைத்த வாய்ப்பு

By பிடிஐ


யூரோ கோப்பைக் கால்பந்துப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில் இத்தாலி அணியுடன் பலப்பரிட்சை நடத்துகிறது இங்கிலாந்து அணி.

லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் டென்மார்க் அணியை 1-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி பைனல் வாய்ப்பை உறுதி செய்தது இங்கிலாந்து அணி.

டென்மார்க் அணி வீரர் சிமன் ஓன்-கோல் அடிக்காமல் இருந்திருந்தால், ஆட்டம் இன்னும் கடுமையாக இருந்திருக்கும். அவரின் கோல்தான் இங்கிலாந்து அணியுடன் சமன் செய்யவைத்தது.

கடந்த 1966-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்குப்பின், பெரிதாக எந்த முக்கிய கோப்பையிலும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறாத இங்கிலாந்து அணி 55 ஆண்டுகளுக்குப்பின் யூரோ கோப்பையின் பைனலுக்கு முதல்முறையாக முன்னேறியுள்ளது.

1966-ம் ஆண்டு உலகக் கோப்பையைத் தவிர இங்கிலாந்து அணி பெரிதாக எந்தக் கோப்பையையும் பெறாத நிலையில் யூரோ கோப்பை இறுதிப்போட்டிக்கு 55 ஆண்டுகளுக்குப்பின் முன்னேறியுள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன் யூரோ கோப்பையி்ல் இங்கிலாந்து அணி, கடந்த 1968, 1990, 1996, 2018 ஆகிய ஆண்டுகளில் அரையிறுதிவரை முன்னேறி தோல்வி அடைந்தது. அதிலும் 1990, 1996, 2018ம் ஆண்டுகளில் நடந்த போட்டியில் அரையிறுதியில் பெனால்டி சூட் முறையில் இங்கிலாந்து வாய்ப்பை இழந்தது.

1966ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்குப்பின் யூரோ கோப்பையில் பைனலுக்கு வருவது இதுதான் முதல்முறை.

கடந்த 1992-ம் ஆண்டுக்குப்பின், யூரோ கோப்பை அரையிறுதியில் பங்கேற்ற 4 அணிகளும் போட்டி நேரத்தில் கோல் அடித்தது இதுதான் முறையாகும். இதற்கு முன் நடந்த 1976, 1984, 1996, 2000ம் ஆண்டுகளில் அரையிறுதியில் போட்டி நேரத்தில் கோல் அடிக்காமல், கூடுதல் நேரத்தில்தான் கோல்அடிக்கப்பட்டன.

டென்மார்க் அணி கடைசியாக கடந்த 1992-ம் ஆண்டு யூரோ கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது. 29 ஆண்டுகளுக்குப்பின் வாய்ப்புப் பெற்ற நிலையில் அதுவும் கைநழுவிப்போனது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இங்கிலாந்து, டென்மார்க் வீரர்கள் மாறி, மாறி பந்தைக் கடத்தி, கோல் அடிக்க முயன்றனர். ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் டாம்ஸ்கார்டுக்கு கிடைத்த ப்ரீ கிக்கை கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலைப்படுத்தினார்.

அடுத்த 9-வது நிமிடத்தில் டென்மார்க் அணி வீரர் சிமன் ஜாயிர், தன்னுடைய அணிக்கு எதிராக கோல் அடிக்க இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமனிலை பெற்றது. முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் இருந்தன.

2-வது பாதியில், டென்மார்க் அணி வீரர் ஜென்ஸன் காயம் காரணமாக வெளியேறவே 10 வீரர்களுடன் விளையாட ேவண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஏற்கெனவே 6 மாற்றுவீரர்கள் களத்தில் இருந்ததால், புதிய வீரரைச் சேர்க்க முடியவில்லை. இருப்பினும், இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்து கோல் முயற்சி ஒவ்வொன்றையும் தடுத்தனர். இதனால் ஆட்ட நேரமுடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

இதையடுத்து, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் இங்கிலாந்துக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கேப்டன் ஹாரி கேன் அருமையான கோலாக மாற்றினார். ஹாரி அடித்த ஷாட்டை டென்மார்க் கோல் கீப்பர் காஸ்பர் ஷூமைக்கேல் தடுத்தபோதிலும் பந்து அவரின் கையில் பட்டு வெளியேறியது,அந்த வாய்ப்பைப் பயன்படுத்திய ஹாரி, தனது வலது காலால் உதைக்கவே கோலானது.

இதையடுத்து டென்மார்க் அணியை 1-2 என்ற கோல்கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்