தெற்கு ஆசிய கால்பந்து அரையிறுதியில் இந்தியா- மாலத்தீவு இன்று மோதல்

By பிடிஐ

தெற்கு ஆசிய கால்பந்து பெட ரேஷன் கோப்பை அரையிறுதியில் இன்று மாலை 3.30 மணிக்கு நடை பெறும் ஆட்டத்தில் இந்தியா-மாலத் தீவு அணிகள் மோதுகின்றன.

திருவனந்தபுரத்தில் நடை பெற்று வரும் இந்த தொடரில் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி லீக் ஆட்டத்தில் 2 வெற்றிக ளுடன் முதலிடத்தை பிடித்து அரை யிறுதிக்கு தகுதி பெற்றது. இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் இலங்கையை 2-0 என்ற கோல் கணக்கிலும், 2வது ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் நேபாளத் தையும் தோற்கடித்தது.

பி பிரிவில் இடம் பெற்றிருந்த மாலத்தீவு அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2வது இடத்தை பிடித்து அரையிறுதியில் நுழைந்தது. அந்த அணி 3-1 என்ற கணக்கில் வங்கதேசத்தையும், அதே கோல்கள் வித்தியாசத்தில் பூடானையும் முதல் இரு ஆட்டங் களில் வீழ்த்தியிருந்தது. கடைசி லீக் ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் ஆப்கனிடம் தோல் வியை சந்தித்தது.

லீக் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு இன்றைய ஆட்டம் கடும் சவாலாகவே இருக்கும்.

தெற்கு ஆசியாவில் மாலத்தீவு அணி சிறந்ததாக உள்ளது. பிராந்திய போட்டிகளில் அந்த அணி 2008ல் பட்டம் வென்றது. 1997, 2003, 2009ம் ஆண்டுகளில் 2வது இடத்தை பிடித்திருந்தது. தரவரிசையில் மாலத்தீவு 160வது இடத்திலும், இந்தியா 166வது இடத்திலும் உள்ளன. 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி தெற்கு ஆசிய கால்பந்து போட்டிகளின் நாக்-அவுட் சுற்றில் மாலத்தீவுளிடம் இது வரை தோற்றதில்லை. மேலும் தற் போதைய தொடரில் இந்திய அணி லீக் ஆட்டத்தில் தோல்வியடையாத நிலையில், மாலத்தீவு, ஆப்கனிடம் 1-4 என தோல்வி கண்டுள்ளது.

6 கோல்கள் அடித்துள்ள இந்திய அணி, ஒரு கோல் மட்டுமே வாங்கியுள்ளது. அதேவேளையில் மாலத்தீவு 7 கோல்கள் அடித்துள் ளது. 6 கோல்களை வாங்கியுள்ளது.

இந்திய அணியில் நட்சத்திர வீரர் ராபின்சிங் காயம் காரணமாக விலகியுள்ளார். இது அணிக்கு சற்று பின்னடைவு தான். அவர் இடத்தில் 18 வயதான இளம் வீரர் லாலியன்ஸூலா களமிறக்கப்படக் கூடும். அவர் நேபாளத்துக்கு எதிரான அறிமுக ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து அசத்தினார். கேப்டன் சுனில் ஷேத்ரியும் நல்ல பார்மில் உள்ளார். இந்த தொடரில் ஒருகோல் மட்டுமே அடித் தாலும், 3 கோல்கள் அடிக்க உதவி செய்துள்ளார். இன்றைய ஆட்டத் தில் அவருக்கு துணையாக ஜிஜி களமிறங்க வாய்ப்புள்ளது.

மாலை 6.30 மணிக்கு நடை பெறும் 2வது அரையிறுதியில் ஆப்கானிஸ்தான்-இலங்கை மோதுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

16 mins ago

ஜோதிடம்

58 mins ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்