விளையாட்டாய் சில கதைகள்: இந்தியாவில் உருவான கபடி விளையாட்டு

By பி.எம்.சுதிர்

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுத்தந்த விளையாட்டு கபடி.

சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கபடி தோன்றியதாகக் கூறப்படுகிறது. மகாபாரத காலத்தில் கபடி விளையாட்டு இருந்ததாகவும், பிற்காலத்தில் கவுதம புத்தர் தனது சிறுவயதில் கபடி விளையாடி இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்காலத்தில் ராஜகுமாரர்கள் தங்கள் உடல் வலுவைக் காட்டி, இளவரசிகளைக் கவர்ந்த முக்கிய விளையாட்டுகளில் ஒன்றாக கபடி கருதப்படுகிறது. அதே நேரத்தில் கபடி விளையாட்டு ஈரானில் தொடங்கியதாக மற்றொரு பிரிவினர் கூறுகின்றனர்.

இப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே கபடி தோன்றியதாக கூறப்பட்டாலும், தற்காலத்தில் ஆடும் நவீன கபடி விளையாட்டு, 1920-களில் தொடங்கப்பட்டது. மகாராஷ்டிரா நகரில் 1921-ம் ஆண்டு கபடி விளையாட்டுக்கான விதிகள் உருவாக்கப்பட்டு, முதல் முறையாக போட்டிகள் நடத்தப்பட்டதாக இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

இதைத்தொடர்ந்து 1950-ம் ஆண்டு இந்திய கபடி கூட்டமைப்பு தொடங்கப்பட்டு, இந்த விளையாட்டுக்கு புதிய வடிவம் கொடுத்து வளர்த்தெடுக்கப்பட்டது. தற்போதைய விதிப்படி தலா 20 நிமிடங்களைக் கொண்ட இரண்டு பாதிகளாக கபடி போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இப்படி இந்தியாவில் தோன்றிய நவீன கபடி போட்டி, மற்ற ஆசிய நாடுகளிலும் தனது சிறகை விரித்துள்ளது. 1990-ம் ஆண்டுமுதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடி சேர்க்கப்பட்டது. அந்த ஆண்டுமுதல் 2014-ம் ஆண்டுவரை இந்திய அணியே ஆசிய விளையாட்டில் கபடிப் போட்டியில் தங்கத்தை வென்றுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் இந்திய அணியிடம் இருந்து ஈரான் அணி தங்கப் பதக்கத்தை பறித்துச் சென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

24 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்