விளையாட்டாய் சில கதைகள்: மனிதனை வென்ற இயந்திரம்

By பி.எம்.சுதிர்

செஸ் போட்டியில் சிறந்தவர் யார் என்ற போட்டியில், காரி காஸ்பரோவை, ‘டீப் ப்ளூ’ என்ற கம்ப்யூட்டர் வென்ற நாள் மே 11, 1997.

புகழ்பெற்ற ஐபிஎம் நிறுவனத்தால் 1989-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர்தான் ‘டீப் ப்ளூ’. செஸ் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான ஜோயல் பெஞ்சமின் என்பவரின் உதவியால் செஸ் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் வகையில் இந்த கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டது. செஸ் விளையாட்டு தொடர்பான சிப்களை ஏற்றிக்கொண்ட இந்த கம்ப்யூட்டருக்கும், அப்போதைய செஸ் சாம்பியனான காரி காஸ்பரோவுக்கும் இடையிலான முதலாவது செஸ் தொடர் 1996-ம் ஆண்டில் நடத்தப்பட்டது. இதில் காரி காஸ்பரோவ் வெற்றி பெற்றார். 6 போட்டிகளைக் கொண்ட இந்த செஸ் தொடரில் 4-2 என்ற புள்ளிக்கணக்கில் காரி காஸ்பரோவின் வெற்றி இருந்தது.

இதைத் தொடர்ந்து, ‘டீப் ப்ளூ’ கம்ப்யூட்டருக்கும் காஸ்பரோவுக்கும் இடையிலான 2-வது தொடர் 1997-ம் ஆண்டில் நடைபெற்றது. இதில் முதல் 5 போட்டிகளின் முடிவில் கம்ப்யூட்டரும், காஸ்பரோவும் தலா 2.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்தச் சூழலில்தான் மே 11-ம் தேதி 6-வது சுற்றுப் போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றிபெற்ற ‘டீப் ப்ளூ, 3.5-2.5 என்ற புள்ளிக்கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ஒரு மணி நேரத்துக்குள் இந்தப் போட்டியில் 19 நகர்த்தல்களில் ‘டீப் ப்ளூ’ வெற்றிபெற, ஒரு இயந்திரத்திடம் தோற்ற விரக்தியில் போட்டி நடந்த இடத்திலிருந்து வெளியேறினார் காஸ்பரோவ்.

இதன்மூலம், செஸ் வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நாளாக மே 11 மாறியது. இது தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று ஐபிஎம் நிறுவனத்தினர் கொண்டாடினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

19 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்