அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கரோனா தொற்று; முகக்கவசம் அணியுங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்: அஸ்வின் மனைவி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவரது மனைவி ப்ரீத்தி அஸ்வின், மிக மோசமான அனுபவம், நலமாகி வருகிறோம். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அணியின் பிரபலமான சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். கடந்த வாரம் திடீரென ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து வீடு திரும்பினார்.

“கரோனா காலகட்டத்தில் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன், 2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்தக் கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம்” என்று அஸ்வின் கூறியிருந்தார்.

இந்நிலையில் அஸ்வின் குடும்பத்தார் 10 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி ப்ரீத்தி அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

''ஒரே வாரத்தில் எனது குடும்பத்தில் 6 பெரியவர்கள், 4 சிறியவர்கள் உட்பட 10 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. குடும்பத்தில் உள்ள இளையவர்கள் மூலம் அனைவருக்கும் தொற்று ஏற்பட்டது தெரியவந்துள்ளது. அனைவரும் வெவ்வேறு வீடுகள், மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

மிக மோசமான வாரம் இது. தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர் 3 பேரில் ஒருவர் குணமடைந்துள்ளார். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி எடுத்துக்கொள்வது மட்டுமே இந்தத் தொற்றுக்கு எதிராகப் போராட ஒரே வழி.

உடல் வலிமையைவிட மனவலிமை மட்டுமே இந்த நோயிலிருந்து நம்மை மீட்கும். 5லிருந்து 8 நாட்கள் மிகக் கடினமானதாக இருந்தது. உதவி செய்யப் பலர் இருந்தனர், உதவினர். ஆனால், யாரும் உங்களுடன் இருக்க முடியாது. நீங்கள் தனிமையில் இருப்பீர்கள். ஏனென்றால் இந்த நோய் உங்களைத் தனிமைப்படுத்தி வைக்கும் நோய் ஆகும். தயவுசெய்து உரியவரை அணுகி உதவி தேடுங்கள்'' என ப்ரீத்தி அஸ்வின் பதிவிட்டுள்ளார்.

மேலும், அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், தன் பெயரை நீக்கி முகக்கவசம் அணியுங்கள், தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் என மாற்றி வைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

48 mins ago

உலகம்

48 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்