பேட்டிங்கில் வலுசேர்க்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்: தெ.ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் புதிதாகச் சேர்ப்பு

By செய்திப்பிரிவு

ஐபிஎல் டி20 தொடரின் 14-வது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ராசே வேன் டர் டூசென் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குள் வருவதற்காக 7 நாட்கள் தனிமைப்படுத்தும் காலத்தையும் ராசே வேன் டர் டூசென் முடித்துவிட்டார். விரைவில் ராஜஸ்தான் அணியில் சேர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் இந்த சீசனிலிருந்து திடீரென விலகிவிட்டனர். இங்கிலாந்து வீரர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் காயம் காரணாகத் தொடரிலிருந்து விலகினர். ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ டை, இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் ஆகியோர் கரோனா வைரஸ் அச்சம் காரணமாகப் பாதியிலேயே விலகினர்.

இதனால், தகுந்த வீரர்கள் இல்லாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தடுமாறி வருகிறது. பந்துவீச்சில் அனுபவமில்லாத வீரர்களுடனும், நடுவரிசையில் சர்வதேச அனுபவமில்லாத வீரர்கள் இல்லாமல் பேட்டிங்கிலும் திணறி வருகிறது.

இந்நிலையில் புதிதாக வீரர்களைச் சேர்க்க வேண்டுமென்றால், இப்போதுள்ள சூழலில் அந்த வீரரை வரழைத்து, தனிமைப்படுத்தி, அதன்பின் அணிக்குள் சேர்க்கவேண்டும். அதனால் மற்ற 7 அணிகளிலும் இருக்கும் ரிசர்வ் வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் கோரியுள்ளது. ஆனால், மற்ற 7 அணிகளும் தங்களின் ரிசர்வ் வீரர்களை அனுப்ப மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, பென் ஸ்டோக்ஸ் இடத்தை நிரப்புவதற்காக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ராசே வேன் டர் டூசென் சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்துள்ள வேன் டர் டூசென் தனக்குரிய 7 நாட்கள் தனிமைப்படுத்தும் காலத்தையும் முடித்து, ராஜஸ்தான் அணியின் பயோ-பபுள் சூழலுக்குள் சேரத் தயாராக இருக்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் அணிக்குள் வேன் டர் டூசென் இடம் பெற்றால் அவருக்கு அது முதல் ஐபிஎல் தொடராக அமையும். இதற்கு முன் பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடிய அனுபவம் உடையவர் டூசென்.

32 வயதாகும் டூசென், சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 2 டி20 போட்டிகளில் 86 ரன்கள் குவித்தார், ஸ்ட்ரைக் ரேட் 153 வைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஒரு நாள் போட்டியிலும் வேன் டர் டூசென் சதம் உள்பட 183 ரன்கள் சேர்த்து நல்ல ஃபார்மில் உள்ளார்.

டி20 போட்டிகளில் விளையாடி மிகுந்த அனுபவம் உடையவர் டூசென். இதுவரை 126 டி20 போட்டிகளில் டூசென் விளையாடி, 3,824 ரன்கள் குவித்து, 38.62 சராசரி வைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்