பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் தமிழக வீரர் நடராஜனுக்கு இடமில்லை: கில், சிராஜுக்கு இடம்; கேதார் ஜாதவ் நீக்கம், குல்தீப், புவ்வி தரம்குறைப்பு

By பிடிஐ


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் வெல்வதற்கு காரணமான வீரர்களில் ஒருவராக இருந்த, தமிழக வீரர் டி நடராஜனுக்கு, பிசிசிஐ அமைப்பின் மத்திய ஊதியக் குழு ஒப்பந்தத்தில் இடமில்லை.

ஷுப்மான் கில், முகமது சிராஜுக்கு முதல்முறையாக சி கிரேடு பிரிவில் ஆண்டுக்கு ரூ.ஒரு கோடி ஊதியத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். புவனேஷ்வர் குமார் காயத்தில் நீண்டகாலம் ஓய்வில் இருந்ததால், அவரின் தரம் குறைக்கப்பட்டுள்ளது. கேதார் ஜாதவ் ஊதிய ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், அக்ஸர் படேல் மீண்டும் மத்திய ஒப்தத்தில் வந்துள்ளார், ஷர்துல் தாக்கூர் சி பிரிவிலிருந்து, பி பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா நீண்ட நாட்களாக எந்தப் போட்டியிலும் பங்கேற்காமல் இருந்து பி பிரிவில் இருந்த நிலையில் அவர் ஆண்டுக்கு 5 கோடி ஊதியம் பெறும் ஏ பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

ஆண்டுக்கு ரூ.7 கோடி ஊதியம் பெறும் ஏபிளஸ் பிரிவில் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா இடம் பெற்றுள்ளனர்.

இது குறித்து பிசிசிஐ அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த ஆண்டு 28 வீரர்களுக்கு மத்திய ஊதிய ஒப்பந்தம்4 பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ளது. இதில் கேப்டன் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர் ஏ+ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி ஊதியம் கிடைக்கும்.

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பி பிரிவிலிருந்து ஏ பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார். இவர் ஆண்டுக்கு இனிமேல் ரூ.5கோடி ஊதியம் பெறுவார். கடந்த ஆண்டு பி பிரிவில் இடம் பெற்று காயத்தால் நீண்டகாலமாக விளையடவில்லை. ஆனால், எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏ பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

இளம் வீரர் ஷுப்மான் கில், முகமது சிராஜ் ஆகியோர் முதல் முறையாக சி பிரிவு ஊதிய ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளனர். ஷர்துல் தாக்கூர் சி பிரிவில் இருந்து பி பிரிவுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதையடுத்து, மூவருக்கும் இந்த உயர்வு அளிக்கப்பட்டுள்ளது

வேப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் கடந்த ஆண்டில் காயத்தால் பல தொடர்களில் விளையாடவி்ல்லை. இதையடுத்து, ஏ பிரிவிலிருந்து பி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கேதார் ஜாதவ் ஊதிய ஒப்பந்தத்தில் இருந்துநீக்கப்பட்டுள்ளார்.

அதேபோல குல்தீப் யாதவ் ஏ பிரிவி்ல் இருந்த நிலையில் கடந்த ஆண்டில் மோசமான ஃபார்ம், சரியாகவிளையாடாதது ஆகியவற்றால், ஏ பிரிவில் இருந்து சி பிரிவுக்கு தரம் இறக்கப்பட்டுள்ளார்.
ஷிகர் தவண், சத்தேஸ்வர் புஜாரா, ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோர் தொடர்ந்து ஏ பிரிவில் உள்ளனர். அக்ஸர் படேல் இங்கிலாந்து தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதையடுத்து, மீண்டும் சி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏ பிளஸ் பிரிவு: (ரூ.7கோடி)
விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா

ஏ பிரிவு: (ரூ.5 கோடி ஊதியம்)
ரவிச்சந்திர அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, சத்தேஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே, ஷிகர் தவண், கேஎல் ராகுல், முகமது ஷமி, இசாந்த் சர்மா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா

பி பிரிவு ( ரூ.3 கோடி)

விருதிமான் சஹா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர், மயங்க் அகர்வால்

சி பிரிவு(ரூ.ஒரு கோடி)
குல்தீப் யாதவ், நவ்தீப் ஷைனி, தீபக் சஹர், ஷுப்மான் கில், ஹனுமா விஹாரி, அக்ஸர் படேல், ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர், யஜுவேந்திர சஹல், முகமது சிராஜ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

33 mins ago

வாழ்வியல்

57 mins ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

31 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்